Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாஜக நிர்வாகி அடித்து கொலை.. இரவில் நடந்த சம்பவம்.. சிவகங்கையில் அதிர்ச்சி

Sivaganga BJP Functionary Murder : சிவகங்கை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் கும்பலிடத் தகராறில் ஈடுபட்ட நிலையில், அந்த கும்பல், பாஜக நிர்வாகியை அடித்து கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாஜக நிர்வாகி அடித்து கொலை.. இரவில் நடந்த சம்பவம்.. சிவகங்கையில் அதிர்ச்சி
கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Aug 2025 08:35 AM

சிவகங்கை, ஆகஸ்ட் 30 : சிவகங்கை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி அடித்து கொலை (Sivaganga BJP Functionary Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலால் இரவு நேரத்தில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சமீப காலமாகவே தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் சதீஷ்குமார் (51) என தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேரந்தவர் சதீஸ்குமார். இவர் மார்கெட் சாலையில் இரு சக்கர வாகனப் பட்டறை வைத்திருந்தார். இவர் பாஜகவின் சிவகங்கை நகர் வர்த்தக பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

அவர் தனது ஊழியர் மணிபாரதியுடன் சேர்ந்து ஒரு வாடகை அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். அந்த அறைக்கு அருகில் மேலும் ஆறு பேர் தங்கியிருந்தனர். சதீஷ்குமார் மணி பாரதியுடன சேர்ந்து மது அருந்தி இருக்கிறார். அப்போது, அவரது அறைக்கு அருகில் இருந்த கும்பலிடம், சதீஷ்குமார் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அந்த சதீஷ்குமார் அடித்துள்ளது. இதில் சதீஷ் குமார் மயக்க நிலைக்கு சென்றார்.

Also Read : ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கடத்தல்.. ரூ.50 லட்சம் கேட்ட கும்பல் கைது!

சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்து கொலை

உடனே, அவரை மணி பாரதி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சதிஷ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து சதிஷ்குமாரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து, சதீஷ் குமாரை கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ராஜகப்பட்டியைச் சேர்ந்த 39 வயது பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. 2025 ஜூலை மாதத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பட்டப்பகலில் பாலகிருஷ்ணன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Also Read : வரதட்சணை கொடுமை.. ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை.. நடந்தது என்ன?

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பலால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாஜக நிர்வாகியான செல்வகுமார் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.