Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சேலத்தில் பயங்கரம்.. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?

Salem Murder : சேலம் மாவட்டத்தில் திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர், அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாகி உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.

சேலத்தில் பயங்கரம்.. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Salem Transgender Murder
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Aug 2025 10:33 AM

சேலம், ஆகஸ்ட் 29 : சேலம் மாவட்டத்தில் திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ராணி. இவர் கூலி வேலை செய்து வருகிறது. இந்த தம்பதிக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களது கடைசி மகன் சரவணன் (31). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறிவிட்டார். இதனையெடுத்து, அவர் தனது பெயரை வனிதா எனவும் மாற்றிக் கொண்டார். மேலும், சேலம் ரயில்வே நிலையம் அருகில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று காலை 9.30 மணியளவில் வனிதாவை பார்க்க அவரது அக்கா மரகதம் சென்றிருக்கிறார். அப்போது, வீட்டிற்கு வெளியே தாழ்பாழ் போட்டப்பட்டு இருந்தது. ஆனால், வனிதாவின் செருப்பு வெளியே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த மரகதம் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, வனிதாவின் முகம் துணியால் மூடப்பட்டு இருந்தது. மேலும், தலையில் ரத்தக் காயங்களுடன் இருந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி மரகதம் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Also Read : கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருநங்கை கொடூர கொலை

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, திருநங்கை வனிதா, இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (23). இவருக்கு வனிதாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வாடகை வீட்டில் இருந்துள்ளனர். மேலும், வனிதா சம்பாதிக்கும் பணத்தை நவீனிடம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் மது குடித்திருக்கின்றனர்.

Also Read : வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி!

அப்போது, இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் வனிதாவை அருகில் கிடந்த இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நவீனையும் தேடி வருகின்றனர்.