Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வரதட்சணை கொடுமை.. ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை.. நடந்தது என்ன?

Uttar Pradesh Dowry Murder : உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் மற்றும் கார் கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்தி வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வரதட்சணை கொடுமை.. ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை.. நடந்தது என்ன?
கொலை செய்யப்பட்ட பெண்
Umabarkavi K
Umabarkavi K | Published: 30 Aug 2025 06:20 AM

உத்தர பிரதேசம், ஆகஸ்ட் 30 : உத்தர பிரசேதத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் கார் கேட்டு பெண்ணை, கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் வரதட்சணை கொடுமையால் தலைவிரித்தாடுகிறது. இந்த வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் சில விபரீத முடிவுகளை எடுப்பதோடு, சில பெண்களை கணவரே கொலை செய்யும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. வரதட்சணையை தடுக்க அரசும் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும், நின்றபாடில்லை. இந்த நிலையில், வடமாநிலமான உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலாஹிடா கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் குல் பைசா (23). இவருக்கு அமொர்கா என்ற பகுதியைச் சேர்ந்த பர்வேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. 2024ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், குல்பைசா தனது கணவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். திருமணத்தின்போதே பெண் வீட்டார் வரதட்சணையாக நகை, பணத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

Also Read : வரதட்சணை கொடுமை – மகனின் கண்முன்னே பெண் எரித்துக்கொலை – கணவன் கைது

இளம்பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொன்ற  கணவன்

எனவே, திருமணத்திற்கு பிறகும, கூடுதல் வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் குல்பிசாவிடம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். கணவனின் தாய் ரூ.10 லட்சம் மற்றும் கார் ஒன்றை கேட்டு பெண் குல் பிசாவை டர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி குல் பிசாவை ஆசிட் குடிக்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆசிட்டை வலுக்கட்டாயமாக அவரது வாயில் ஊற்றியுள்ளதாக தெரிகிறது. இதில் பெண் குல்பிசாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். பின்னர், அவர் மொராதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. 17 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குல் பிசா 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Also Read : தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்.. பெண்களை புதைத்தாக புகார் அளித்தவர் கைது.. ஷாக் பின்னணி!

உயிரிழந்த குல் பிசாவின் தந்தை ஃபுர்கான் அளித்த புகாரின் பேரில், பர்வேஸ், அசிம், குலிஸ்டா, மோனிஷ், சைஃப், டாக்டர் புரா மற்றும் பாப்பு ஆகிய ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், வரதட்சணை மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள்” எனக் கூறினார்.