Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாடுகளுக்கு பதிலாக பிள்ளைகளை வைத்து உழவு செய்த விவசாயி.. வெறுமையின் கொடுமை!

Farmer Uses His Children to Plough | ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பிள்ளைகளை வைத்து நிலத்தை உழவு செய்துள்ளார். மாடுகள் மற்றும் டிராக்டர்களை வைத்து உழவு செய்ய அவரிடம் போதிய பணம் இல்லாத நிலையில், இந்த செயலை செய்துள்ளார்.

மாடுகளுக்கு பதிலாக பிள்ளைகளை வைத்து உழவு செய்த விவசாயி.. வெறுமையின் கொடுமை!
நிலத்தை உழுத பிள்ளைகள்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Aug 2025 13:25 PM

கடப்பா, ஆகஸ்ட் 25 : ஆந்திரா பிரதேசத்தில் (Andhra Pradesh) விவசாயி ஒருவர் தனது மகன் மற்றும் மகளை ஏறு பூட்டி உழவு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் செய்வதற்கு போதுமான பணம் இல்லாததாலும், மாடுகளை வைத்து உழவு செய்தால் அதிக பணம் செலவாகும் என்பதாலும் அவர் தனது பிள்ளைகளை வைத்து உழவு செய்துள்ளார். உணவு பொருட்களை உற்பத்தி செய்து உலகிற்கு அனுப்பி வைக்கும் விவசாயி இத்தகைய வறுமையான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மாடுகளுக்கு பதிலாக பிள்ளைகளை வைத்து உழவு செய்த விவசாயி

ஆந்திர பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள பெண்டிளிமர்ரி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி சந்திரசேகர் ரெட்டி. இவர் பல காலமாக விவசாயம் செய்து வரும் நிலையில், தற்போது அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழலில் உள்ளது. இருப்பினும் தங்களது வாழ்வாரத்திற்காக அவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது நிலத்தை உழுவதற்கு மாடுகளுக்கு பதிலாக தனது இரண்டு பிள்ளைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 2 மாத குழந்தைக்கு அவசர தடுப்பூசி… உயிரைப் பணயம் வைத்து நர்ஸ் செய்த சம்பவம்.. குவியும் பாராட்டு!

பணம் இல்லாததால் பிள்ளைகளை வைத்து உழவு செய்யும் விவசாயி

நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான மாடுகள் மற்றும் டிராக்டர் வாங்க அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அவர் தனது மகனையும், மகளையும் உழவில் ஈடுபத்தியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், வேலைகளுக்கு ஆட்களை வைத்து வயலில் களைகளை எடுக்கும் பணிகளை மேற்கொண்டால் அதிக செலவு ஆகும். மாடுகளை வைத்து உழவு செய்தாலும் அதிக செலவு ஆகும். அதனால் மகளையும், மகனையும் கொண்டு களைகளை எடுக்கும் பணிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஜன்னலுக்குள் சிக்கிய தலை.. இரவு முழுவதும் பள்ளியில் தவித்த சிறுமி!

இந்த விவசாயிக்கு மொத்தம் 9.5 ஏக்கர்கள் நிலம் உள்ளது. அதில் அவர் வெறும் 3  ஏக்கர்களில் மட்டுமே பயிர் செய்து வருகிறார். ஏக்கர் ஒன்றுக்கு களை எடுக்க ரூ.1,500 ஆகும் நிலையில், அதனை செய்து முடிக்க பணம் இல்லாததால் அந்த விவசாயி தனது பிள்ளைகளை வைத்து களை எடுத்துள்ளார். விவசாயி நிலத்தை உழவு செய்ய வைத்த அவரது மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில், அவரது மகள் பள்ளியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.