Mosquito Repellent Kids: மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசு தொல்லை.. குழந்தைகளுக்கு கொசு மருந்து பயன்படுத்தலாமா..?
Safe Mosquito Repellents for Kids: மழைக்காலத்தில் குழந்தைகளை கொசுக்களிடமிருந்து பாதுகாப்பது மிக மிக முக்கியம். கொசு விரட்டிகள் தேர்வு செய்யும் போது DEET, பிகாரிடின், எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற பொருட்களின் அளவு மற்றும் குழந்தையின் வயது கருத்தில் கொள்ள வேண்டும்.

மழைக்காலம் (Rainy Season) தொடங்கியதும் நம் ஒவ்வொரு வீட்டிலும் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கும். அதிலும், குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதால் பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். மழைக்காலத்தின்போது கொசு கடிப்பதால் டெங்கு, மலேரியா (Malaria), சிக்கன்குனியா போன்ற நோய்கள் அதிகளவில் பரவ தொடங்கும். எனவே, இந்த நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது முக்கியம். இதற்காக, பெற்றோர்கள் கடைகளில் கிடைக்கும் கிரீம், ஸ்ப்ரே அல்லது சுருள் போன்ற கொசு விரட்டி (Mosquito Repellent) பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இவை கொசுவிரட்டிகள் கொசுக்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தாலும் சிறுவர்களின் மென்மையான சருமம் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
சிறுவர்களுக்கு கொசு விரட்டும் க்ரீம் பயன்படுத்தலாமா..?
குழந்தைகளின் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பெரியவர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படும் விஷயங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு எந்த கிரீம் தடவுவதும் ஆபத்தானது, ஏனெனில் குழந்தை விளையாடும்போது தனது கைகள் அல்லது துணிகளை கண்கள் அல்லது வாயால் தொடுகிறது, இதன் காரணமாக ரசாயனங்கள் உடலில் நுழைந்து தீங்கு விளைவிக்கும். கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க எந்த கிரீம் தடவுவதற்கு முன்பும் 4 விஷயங்களை கவனத்தில் கொள்வது முக்கியம்.
ALSO READ: குழந்தைகளின் முன் சண்டைபோடும் பெற்றோரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து!




DEET (டைதைல்டோலுஅமைடு):
DEET என்பது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் விரட்டும் இரசாயனமாகும். வெவ்வேறு விரட்டிகளில் இந்த வேதிப்பொருளின் அளவு 5 முதல் 100 சதவீதம் வரை மாறுபடும். WHO இன் படி, 10 சதவீதத்திற்கும் குறைவான DEET கொண்ட விரட்டிகள் மட்டுமே சிறுவர்களுக்கு பாதுகாப்பானவை. இதன் அதிகப்படியான பயன்பாடு 5 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு அரிப்பு மற்றும் தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
பிகாரிடின் (இகாரிடின்):
பிகாரிடின் ரசாயனம் DEET போன்றது. ஆனால், மணம் குறைவாகவே வெளிப்படும். இது லேசானது மற்றும் சருமத்தில் ஒட்டும் தன்மையை ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு இது சற்று சிறந்தது ஆனால் ரசாயனத்தின் அளவு 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் (OLE):
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் இயற்கையான மூலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு ரசாயனம். ஆனால் இது பதப்படுத்துதல் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது. இது இயற்கையாகவே தயாரிக்கப்பட்டாலும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது பாதுகாப்பானதாகக் கருதப்படவில்லை.
பெர்மெத்ரின்:
பெர்மெத்ரின் ரசாயனம் கிரீம்கள் அல்லது ஸ்ப்ரேக்களில் அரிதாகவே காணப்படுகிறது, ஆனால் துணிகள் அல்லது கொசு வலைகளில் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படுகிறது. இதை குழந்தைகளின் தோலில் தடவினால், அது அரிப்பு, தோல் தொற்று அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
ALSO READ: உங்கள் குழந்தை டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறதா? எச்சரிக்கும் மருத்துவர்
கொசுக்களை விரட்ட சில இயற்கை அல்லது மூலிகை கொசு விரட்டி பொருட்களும் கடைகளில் கிடைக்கின்றன. இவை சிட்ரோனெல்லா, எலுமிச்சை, யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்துகின்றன. இவை குழந்தைகளுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.
இது தவிர, மாலை நேரங்களில் உங்கள் குழந்தையை முழு கை ஆடைகளை அணியச் செய்வது, தூங்கும் போது கொசு வலையைப் பயன்படுத்துவது, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்க விடாமல் இருப்பது போன்றவற்றை செய்யலாம்.