Monsoon Hair Care Tips: மழைக்காலத்தில் முடி உதிர்வை தடுப்பது எப்படி? இயற்கை வழிமுறைகள் இதோ!
Stop Hair Fall in Monsoon: மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் மாசுபாடு காரணமாக தலை முடி உதிர்வு அதிகரிக்கிறது. இயற்கை வழிமுறைகளான தேங்காய் எண்ணெய் பயன்பாடு, வெதுவெதுப்பான நீரில் தலைக்குளித்தல், சீயக்காய் பயன்பாடு ஆகியவை முடி உதிர்வைத் தடுக்க உதவும்.

மழைக்காலத்தில் (Rainy Season) முடி உதிர்தல் (Hair Fall) என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால், கொஞ்சம் கவனிப்பும், சரியான பழக்கவழக்கங்கள் இருந்தால் நம்மால் அதை சரி செய்யவும் முடியும், தடுக்கவும் முடியும். முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட தொடங்கியதும் ஆன்லைன் வாயிலாக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அதிக செலவுகளை மேற்கொள்கிறோம். இதற்கு பதிலாக, வீட்டில் இருக்கும் சிறிய பொருட்களை கொண்டும் சீரான உணவுக்கு முன்னுரிமை (Natural Solutions) கொடுத்தும் சரி செய்யலாம். அதன்படி, இந்த குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால், மழைக்காலத்தில் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
ALSO READ: மழைக்காலத்தில் வீட்டிற்குள் படையெடுக்கிறதா எறும்புகள்..? இயற்கை முறையில் இப்படி விரட்டுங்கள்!
மழைக்காலத்தில் முடி உதிர காரணம் என்ன..?
மழைக்காலத்தின்போது வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும். இதன் காரணமாக, தலையில் ஏற்படும் வியர்வை மற்றும் எண்ணெய் வெளியேறாமல் உச்சந்தலையில் குவிய தொடங்குகிறது. இந்த எண்ணெயும் அழுக்கும் சேர்ந்து உச்சந்தலையின் துளைகளை அடைத்து, முடி வேர்கள் பலவீனமடைந்து முடி உதிரத் தொடங்குகிறது. இது தவிர, மழை நீர் பெரும்பாலும் மாசுபடுகிறது, இது முடியின் மீது விழுந்து அவற்றை மேலும் சேதப்படுத்துகிறது.




மழைக்காலத்தில் முடி உதிர்தலை தடுக்க என்ன செய்யலாம்..?
- மழைக்காலத்தில் குழாய் நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ நேரடியாக தலைமுடியை கழுவுவதற்கு பதிலாக, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இவை, உச்சந்தலையை சுத்தம் செய்வது மட்டுமின்றி, முடி வேர்களையும் பலவீனப்படுத்தாது.
- மழைக்காலத்தில் உச்சந்தலையில் வியர்வை மற்றும் தூசி படிய தொடங்கிவிடும். இதுபோன்ற சூழ்நிலையில், வாரத்திற்கு 2 முறையாவது லேசான மற்றும் சீயக்காய போன்ற இயற்கையானவற்றை கொண்டு இந்த எண்ணெயும் அழுக்கும் சேர்ந்து உச்சந்தலையின் துளைகளை அடைத்து, முடி வேர்கள் பலவீனமடைந்து முடி உதிரத் தொடங்குகிறது. இது தவிர, மழை நீர் பெரும்பாலும் மாசுபடுகிறது, இது முடியின் மீது விழுந்து அவற்றை மேலும் சேதப்படுத்துகிறது.
- தேங்காய், பாதாம் அல்லது நெல்லிக்காய் எண்ணெய் போன்றவற்றை 2 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் தடவலாம். இது ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்ட முடியை ஊட்டமளிப்பதோடு அதன் வேர்களையும் பலப்படுத்துகிறது.
- மழைக்காலத்தில் ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே மற்றும் டை போன்ற ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். இவை முடியை வறண்டு பலவீனமாக்கி முடியை உதிர செய்யும்.
- ஹேர் ட்ரையர், ஸ்ட்ரைட்னர் அல்லது கர்லிங் அயர்ன் போன்ற வெப்பமூட்டும் கருவிகள் முடியை சேதப்படுத்தும். மிகவும் அவசியமானால், முதலில் வெப்பப் பாதுகாப்பு ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.
ALSO READ: மழைக்காலத்தில் வீட்டிற்குள் பாம்பா..? என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? முழு விவரம்!
- முடியை உள்ளிருந்து வலுப்படுத்த, துத்தநாகம், இரும்புச்சத்து, பயோட்டின், வைட்டமின்-இ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். அதன்படி முட்டை, கீரை, பாதாம், வால்நட்ஸ், தயிர் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை உங்கள் உணவில் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
- மழைக்காலங்களில் உங்களுக்கு தாகம் குறைவாகவே இருக்கும். இதனால், பெரும்பாலானோர் தண்ணீர் குடிப்பதில்லை. உங்கள் உடலையும் முடியையும் நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். உங்கள் உச்சந்தலை வறண்டு போகாமல் இருக்கவும், உங்கள் தலைமுடி ஊட்டமளிக்கவும் தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.