Get Rid Of Ants: மழைக்காலத்தில் வீட்டிற்குள் படையெடுக்கிறதா எறும்புகள்..? இயற்கை முறையில் இப்படி விரட்டுங்கள்!
How to Get Rid of Ants Naturally: மழைக்காலத்தில் வீட்டில் எறும்புகள் அதிகமாக வருமா? கவலை வேண்டாம்! இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி எறும்புகளை எளிதாக விரட்டலாம். இலவங்கப்பட்டை எண்ணெய், வினிகர், புதினா எண்ணெய், எலுமிச்சை/ஆரஞ்சு தோல் மற்றும் பெருங்காய நீர் ஆகியவை எறும்புகளை விரட்ட உதவும்.

வானிலை மாறும்போதும், உடல்நலத்தில் மட்டுமின்றி, வீடுகளுக்குள் சில பிரச்சனைகள் ஏற்படும். மழைக்காலத்தின்போது, தங்களை பாதுகாத்துக்கொள்ள பூச்சிகள், எறும்புகள் (Ants) போன்றவை வீட்டிற்குள் படையெடுக்க தொடங்கும். இதில், கருப்பு எறும்புகளால் ஆபத்து இல்லையென்றாலும், சிவப்பு எறும்புகள் நமக்கு வலியை கொடுக்கும். மெல்ல மெல்ல வீட்டிற்குள் வந்து சமையலறை முதல் படுக்கையறை வரை நமக்கு தொல்லையை தருகின்றன. அதிலும், குறிப்பாக வீட்டிற்குள் குழந்தைகள் இருந்தால், நாம் மிகவும் கவனத்துடன் இருப்பது முக்கியம். அந்தவகையில், மழைக்காலத்தின்போது (monsoon) வீட்டிற்குள் வரும் எறும்புகளை எப்படி வெளியேற்றலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
இலவங்கப்பட்டை:
கடைகளில் கிடைக்கும் இலவங்கப்பட்டை எண்ணெயை வாங்கி, அதில் சிறிதளவை தண்ணீரில் கலந்து, பஞ்சு அல்லது ஸ்ப்ரே உதவியுடன் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தடவவும் அல்லது தெளிக்கவும். இதைச் செய்வதன் மூலம், எறும்புகள் வந்த இடத்திற்கு மீண்டும் வராது. இந்த வாசனையில் இருந்து தூரமாக செல்லும்.
ALSO READ: மழைக்காலத்தில் சுவர்களில் ஈரப்பதமா..? வீட்டைப் பாதுகாக்கும் 5 எளிய வழிகள்..!




வினிகர்:
உங்கள் வீட்டிற்குள் எறும்புகள் இருக்கும் இடத்தை பார்வையிட்டால், 1 டீஸ்பூன் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் தண்ணீருடன் கலந்து வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தடவலாம். இவ்வாறு செய்வதன் மூலம், எறும்புகள் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போய்விடும்.
புதினா:
எறும்புகளை எளிதாக விரட்ட புதினாவை பயன்படுத்தலாம். இதன் வாசனைக்கும் எறும்புகள் வராது. அப்படி இல்லையென்றால், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புதினா எண்ணெயைப் பயன்படுத்தலாம். எனவே, காட்டன் பஞ்சின் உதவியுடன் புதினா எண்ணெயை நேரடியாக மூலைகளில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதுமூலமும், அங்கிருந்து எறும்புகள் ஓடும்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு:
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களைக் கொண்டும் எறும்புகளை விரட்டலாம். எறும்புகள் எங்கு வந்தாலும், அங்கு எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களை வைக்கவும். எறும்புகளுக்கு அதன் வாசனை பிடிக்காது, அவை வெளியேறிவிடும்.
பெருங்காய நீர்:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் பெருங்காயப் பொடியைக் கலக்கவும். இப்போது எறும்புகள் அதிகமாக நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்யலாம். எறும்புகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவற்றை முற்றிலுமாக நீங்கும் வரை இதை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யவும்.
குறிப்புகள்: வீட்டிற்குள் எறும்புகள் வந்தால் முடிந்தவரை இயற்கை முறையில் விரட்ட முயற்சி செய்யுங்கள். கடைகளில் எளிதாக கிடைக்கிறது என்று எறும்பு பொடிகள் மற்றும் சாக்பீஸ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் தெரியாமல் வாயில் வைத்தால் பிரச்சனைதான்.
ALSO READ: மழைக்காலத்தில் சமைக்கும் பொருளை நாசம் செய்யும் ஈரப்பதம்.. பாதுகாப்பது எப்படி..?
வீட்டை சுத்தமாக வையுங்கள்:
அழுக்கு இருக்கும் இடத்திலேயே எறும்புகள் அடிக்கடி வரும். எனவே வீட்டை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருங்கள். தினமும் வீட்டை துடைத்து துடைக்கவும். உணவுப் பொருட்கள் மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.