காதலனுடன் வாழ கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி.. உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த கொடூரம்!
Wife Kills Husband with Lover | ஆந்திர பிரதேசத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண், கள்ளக்காதலன் உடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது கள்ளக்காதலன் உடன் இணைந்து தனது கணவனை உணவில் தூக்க மாத்திரை கலந்தும், மூச்சு திணற செய்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

நகரி, ஆகஸ்ட் 16 : ஆந்திராவை சேர்ந்தவர் நல்லி ராஜு. இவருக்கும் மௌனிகா என்ற பெண்ணுக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் மௌனிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கணவர் நல்லி ராஜுவுக்கு தெரிய வரவே, அது குறித்து மௌனிகாவை அவர் கண்டித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத மௌனிகா உதயகுமாருடன் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நல்லி ராஜுவை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் உதயகுமாருடன் சேர்ந்து வாழ அவர் முடிவு செய்துள்ளார்.
கனவனை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் இணைந்து திட்டம் தீட்டிய மனைவி
அதன்படி ஆகஸ்ட் 5, 2025 அன்று மௌனிகா தான் வீட்டில் சமைத்த உணவில் தனது கணவருக்கு தெரியாமல் பத்து தூக்க மாத்திரைகளை கலந்து அவருக்கு பரிமாறி உள்ளார். இதன் காரணமாக தூக்கம் வரவே நல்லி ராஜு அறைக்கு சென்று தூங்கி உள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த பெண்ணின் கள்ளக்காதலன் உதயகுமார் தனது நண்பருடன் இணைந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு திணற செய்து கொலை செய்துள்ளனர். பின்ன ராஜுவின் உடலை உதயகுமாரும், அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிணத்தை வீசி உள்ளனர். இந்த நிலையில், வெளியே சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என மௌனிகா தனது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு.. 46 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!




சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய குற்றவாளிகள்
சம்பவம் நடத்த அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 6,2025 அன்று குடியிருப்பு பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி அந்த பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சம்பவத்தன்று சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றுடன் உதயகுமார் சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
கொலைக்கு காரணமான மூன்று பேரையும் கைது செய்த போலீசார்
இதன் காரணமாக உதயகுமார் மௌனிகா ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்ததை மௌனிகா ஒப்பு கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மௌனிகா அவரது கள்ளக்காதலன் உதயகுமார் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.