Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனைவியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கணவர்.. நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

Husband Carries Wife's Body on Two Wheeler | சாலை விபத்தில் உயிரிழந்த மனைவியின் உடலை எடுத்துச் செல்ல யாரும் முன்வராததால், மனமுடைந்த கணவர் உடலை தனது இருசக்கர வாகனத்தில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கணவர்.. நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்!
மனைவியின் உடலை இருசக்கர் வாகனத்தில் எடுத்துச் சென்ற நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Aug 2025 11:57 AM

நாக்பூர், ஆகஸ்ட் 12 : நாக்பூரில் (Nagpur) தனது மனையின் சடலத்தை கணவர், இருசக்கர வாகனத்தில் கட்டி எடுத்து சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் சிக்கி அந்த பெண் உயிரிழந்த நிலையில், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் யாரும் உதவ முன்வராததால் அனத நபர் அவ்வாறு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில்,  அது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மனைவி – உதவிக்கு வராத பொதுமக்கள்

ஆகஸ்ட் 09, 2025 அன்று கணவன் – மனைவி இருவர் இருசக்கர வாகனத்தில் நாக்பூரில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் ஒன்று அந்த தம்பதியின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி பெண் கீழே அவர் மீது ஏரிய வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அனத பெண்ணின் கணவர் உதவிக்காக சாலையில் சென்ற வாகனங்களை அழைத்துள்ளார். ஆனால், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் மனைவியின் உடலை தனது இருசக்கர வாகனத்தில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : Thrissur Viral Video: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. நடு ரோட்டில் ஓடி ஓடி அனுப்பி வைத்த பெண் காவல்துறை அதிகாரி!

மனைவியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கணவர்

அந்த நபர் சடலத்தை வாகனத்தில் கட்டி எடுத்துச் சென்றதை கவனித்த போலீஸ், உடனடியாக அவரை பின்தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர். போலீசாரிடம் அந்த நபர் உண்மையை கூறிய நிலையில், ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆங்காங்கே கிடந்த உடல் பாகங்கள்.. பெண்ணின் உடலை 10 துண்டாக வெட்டிய கொடூரம்.. கர்நாடகாவில் பகீர்!

இந்த சம்பவத்தில் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு தான் காவல்துறை தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.