கணவனின் ஆண் உறுப்பை அறுத்த இரண்டாவது மனைவி.. அதிர்ச்சி சம்பவம்!
Wife Cuts Husband Genitals | உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அன்சர் அகமது என்ற நபர் தனது இரண்டு மனைவிகளுடன் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரின் இரண்டாவது மனைவி அவரின் ஆண் உறுப்பை அறுத்துள்ளார்.

லக்னோ, ஆகஸ்ட் 12 : லக்னோவில் (Lucknow) அன்சர் அகமது என்ற நபர் தனது இரண்டு மனைவிகளுடன் வசித்து வந்த நிலையில், அவரது இரண்டாவது மனைவி அந்த நபரின் ஆண் உறுப்பை அறுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்த நிலையில், கணவன் மனைவி இடையே தகராறு முற்றிய நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த கணவன்
உத்தர பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சர் அகமது. 38 வயதாகும் இவருக்கு சபிஜோல், நஸ்னீன் என்ற இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக அன்சர் மற்றும் அவரது இரண்டு மனைவிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மூவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க : Thrissur Viral Video: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. நடு ரோட்டில் ஓடி ஓடி அனுப்பி வைத்த பெண் காவல்துறை அதிகாரி!




கணவனின் ஆண் உறுப்பை அறுத்த இரண்டாவது மனைவி
வழக்கம் போல அன்சர் அகமது மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நஸ்னீன் பானுவுக்கும் இடையே நேற்று (ஆகஸ்ட் 11, 2025) கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்ட நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நஸ்னீன் பானு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கணவரின் ஆண் உறுப்பை அறுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அகமது அலறி துடித்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த உறவினர்கள்
அகமதுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது முதல் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நஸ்ரின் பானுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஆங்காங்கே கிடந்த உடல் பாகங்கள்.. பெண்ணின் உடலை 10 துண்டாக வெட்டிய கொடூரம்.. கர்நாடகாவில் பகீர்!
கணவனின் ஆண் உறுப்பை மனைவி அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.