காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. 1.5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை!
Wife Killed Husband | கர்நாடகாவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் தனது காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்துள்ளார். கணவன் ஓடையில் விழுந்து உயிரிழந்ததாக அவர் கூறிய நிலையில், சுமார் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை சம்பவத்தின் உண்மை தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாவணகெரெ, ஜூலை 30 : கர்நாடகா (Karnataka) மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும் சன்னகிரி தாலுகா அன்னபுரா கிராமத்தை சேர்ந்த நிங்கப்பா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த தம்பதிக்கு 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், மருத்துவமனையில் பரிசோதனைச் செய்தபோது நிங்கப்பாவுக்கு குறைப்பாடு இருப்பது தெரிய வந்துள்ளது. நாளடைவில் நிங்கப்பாவின் குறைபாடு குறித்து லட்சுமிக்கும் தெரிய வந்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவில் கர்ப்பமான மனைவி – கருவை கலைத்த கணவன்
நிங்கப்பா பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில், அவருடன் வேலை செய்து வந்த திப்பேஷ் நாயக்குடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக அடிக்கடை தனிமையில் சந்தித்துக்கொண்ட இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் காரணமாக லட்சுமி கர்ப்பமடைந்துள்ளார். தனக்கு குறைபாடு இருக்கும்போது தனது மனைவி எப்படி கர்ப்பமாக முடியும் என யோசித்த நிங்கப்பா, சந்தேகத்தின் அடிப்படையில் லட்சுமியின் வயிற்றில் இருந்த கருவை கலைத்துள்ளார்.
இதையும் படிங்க : மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்.. தானும் தூக்கிட்டு தற்கொலை!
காதலனுடன் திட்டமிட்ட கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
தனது வயிற்றில் வளர்ந்த கருவை நிங்கப்பா கலைத்ததால் ஆத்திரமடைந்த லட்சுமி, நிங்கப்பாவை தீர்த்துக்கப்பட்ட முடிவு செய்துள்ளார். அது குறித்து அவர் தனது காதலனிடம் கூறிய நிலையில், இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஜனவரி 18, 2024 அன்று விருந்து வைப்பதாக நிங்கப்பாவைவும், லட்சுமியையும் திப்பேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிங்கப்பாவுக்கு அதிக அளவு மது குடிக்க வைத்துள்ளார். இதனால் தலைக்கேறிய போதை காரணமாக நிங்கப்பா நிதானத்தை இழந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்சுமியும், திப்பேஷும் அவரை கல்லால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அருகில் இருந்த ஓடையில் வீசியுள்ளனர். அப்போது தனது கணவர் மது போதையில் ஓடையில் விழுந்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.