மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்.. தானும் தூக்கிட்டு தற்கொலை!
Husband Killed Wife and Himself | இந்தியாவில் சமீப காலமாக குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் 56 வயது நபர் ஒருவர் தனது 48 வயது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

திருவனந்தபுரம், ஜூலை 29 : கேரளாவில் (Kerala) குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதிக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோகத்தில் முடிந்த குடும்ப தகராறு – கணவன், மனைவி பலி
குடும்பத்தில் மன கசப்புகள் காரணமாக சண்டை வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு முறை கணவன், மனைவிக்கு இடையே சண்டை வரும்போது அதனை பேசி சரிசெய்ய வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டுவது எப்படி என்பதில் உறுதியாக உள்ளனர். இவ்வாறு இருப்பது உறவில் விரிசலை ஏற்படுத்தி, சில ஆபத்தான விஷயங்களுக்கு காரணமாக அமைந்துவிடும்.
இதையும் படிங்க : ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்.. பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு… 50 பேர் காயம்!




மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன்
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஏரியூர் பகுதியில் சேர்ந்தவர் ரெஜி. 56 வயதான இவருக்கு பிரசோபா என்ற 48 வயது மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 27, 2025 அன்று, பிரசோபாவின் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது பிரசோபா உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இதையும் படிங்க : பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 20 வாகனங்கள்.. ஒருவர் பலி!
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார்
பிரசோபாவின் கணவர் ரெஜி படுக்கை அறையில் பிணமாக தொங்கி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரயோக பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.