Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலனுடன் இணைந்து கணவை கொலை செய்த பெண்.. காட்டி கொடுத்த இன்ஸ்டாகிராம் உரையாடல்.. அதிர்ச்சி சம்பவம்!

Woman Killed Husband With Lover | டெல்லியில் பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் தம்பி பெண்ணின் இன்ஸ்டாகிராம் செயலியை சோதனை செய்து பார்த்த போது திருமணத்தை மீறிய உறவில் இருந்த அந்த பெண் தான் இந்த கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

காதலனுடன் இணைந்து கணவை கொலை செய்த பெண்.. காட்டி கொடுத்த இன்ஸ்டாகிராம் உரையாடல்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jul 2025 07:23 AM

புதுடெல்லி, ஜூலைம் 20 : டெல்லியில் (Delhi) திருமணத்தை மீறிய உறவில் (Extra Marital Affair) இருந்த பெண், தனது காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தனது கணவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்ததாக கணவரின் குடும்பத்தாரிடம் அந்த பெண் நாடகமாடிய நிலையில், உயிரிழந்த நபரின் தம்பி இந்த மரணத்திற்கு பின்னால் இருந்த சதியை கண்டுபிடித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்த பெண்

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியை சேர்ந்தவர் கரன் தேவ். 35 வயதாகும் இவருக்கு சுஷ்மிதா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கரன் தேவ் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் சுஷ்மிதா தெரிவித்துள்ளார். இதனால் பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த கரன் தேவின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் சொன்னதை கேட்டு சுஷ்மிதா கதறி அழ தொடங்கியுள்ளார். அப்போது கரன் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு சுஷ்மிதா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மட்டுமன்றி சுஷ்மிதாவின் உறவினரான ராகுல் தேவ் என்பவரும் பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குடும்பத்தார் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ராகுல் தேவ் என்பவர் சுஷ்மிதாவுக்கு மைத்துனர் முறை ஆகும்.

கொலைக்கு பின்னால் இருந்த சதியை கண்டுபிடித்த தம்பி

இந்த நிலையில், கரன் தேவின் தம்பி குணால் சந்தேகத்தின் அடிப்படையில் சுஷ்மிதாவின் மொபைல் போனை சோதனை செய்துள்ளார். அதில் அவர் அடிக்கடி ராகுல் தேவிடம் பேசியது தெரிய வந்துள்ளது. பின்னர் சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் செயலியை சோதித்துப் பார்த்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது சுஷ்மிதாவும், ராகுல் தேவும் இணைந்து திட்டம் தீட்டி கரன் தேவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : லிவ் இன் பார்ட்னரை கொன்ற இளைஞர்.. துடிதுடித்து இறந்துபோன பெண்.. ஆந்திராவில் ஷாக்!

அவர்களின் இன்ஸ்டாகிராம் உரையாடலின்படி கரன் தேவ் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கொலைக்கான ஆதாரங்களான இன்ஸ்டாகிராம் உரையாடல்களை கைப்பற்றிய போலீசார் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.