Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லியில் கார் ஏற்றி 5 பேர் படுகாயம்.. மதுபோதையில் இருந்த ஓட்டுநர் கைது..

Delhi Car Accident: டெல்லியின் வசந்த விஹார் பகுதியில் இருந்த நடைபாதையில் பொதுமக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக அதிவேகமாக ஒரு கார் வந்துள்ளது. கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி உள்ளார். இதில் எட்டு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

டெல்லியில் கார் ஏற்றி 5 பேர் படுகாயம்.. மதுபோதையில் இருந்த ஓட்டுநர் கைது..
விபத்துக்குள்ளான கார்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jul 2025 14:14 PM

டெல்லி, ஜூலை 13, 2025: டெல்லியில் வசந்த விஹார் பகுதிகள் நடைபாதையில் படுத்து இருந்த எட்டு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் மீது ஆடி சொகுசு கார் ஏற்றிய 40 வயதான உத்சவ் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரை ஓட்டியவர் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்டவசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியின் வசந்த விஹார் பகுதியில் இருந்த நடைபாதையில் பொதுமக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக அதிவேகமாக ஒரு கார் வந்துள்ளது. கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி உள்ளார். இதில் எட்டு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுபோதையில் கார் ஓட்டிய நபர்:

இந்த சம்பவம் 2025 ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை ஒன்று 45 மணியளவில் நடந்துள்ளது. துவாரகாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனரான உத்சவ் சேகர் என்பவர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 40 ஆகும். விபத்து நடந்த போது அவர் நொய்டாவிலிருந்து பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: திருவள்ளூரில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் சரக்கு ரயில்.. மீட்பு பணிகள் தீவிரம்..

பின்னர் அவரிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த உடனேயே அங்கு இருக்க கூடிய பொதுமக்கள் போலீசார் வருவதற்கு முன்னரே காயமடைந்தவர்களை அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

தீவிர விசாரணையில் போலீசார்:


காயமடைந்தவர்களில் லதி (40), அவரது மகள் பிம்லா (8), கணவர் சபாமி என்ற சிர்மா (45), ராம் சந்தர் (45), அவரது மனைவி நாராயணி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்