நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற சட்டை.. பிடிக்க சென்ற மாணவர் பரிதாப பலி!
Kota Student Drowns Death | உத்தர பிரதேச மாநிலம் பரேலி நகரில் பொறியியல் நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அவரது சட்டை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதனை பிடிக்க சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கோட்டா, ஜூலை 17 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற மாணவர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சட்டையை பிடிக்க முயன்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வீழ்ச்சியில் நீரோட்டம் அதிகமாக இருந்த நிலையில், கரை திரும்ப முடியாத அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வந்த நிலையில், அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சட்டையை எடுக்க சென்ற மாணவர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீர்விழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர்
உத்திர பிரதேசத்தின் பரோலி நகரை சேர்ந்தவர் முகமது முஜீப் சைபி. 19 வயதாகும் இவர் ராஜஸ்தானின் கோட்ட நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியியல் நுழைவு தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் கோட்டா அருகே உள்ள பீம்லாத் நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஆசைப்பட்ட முகமது அது குறித்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அதன்படி முகமது மற்றும் அவரது நான்கு நண்பர்கள் இணைந்து இருசக்கர வாகனத்தில் சுமார் 70 கிலோமீட்டர் தூரம் பயணித்து அந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
சட்டையை பிடிக்க சென்று உயிரை விட்ட மாணவர்
நீர்வீழ்ச்சிக்கு சென்றதும் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக குளித்துள்ளனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் வரை நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது முகமதின் சட்டை தண்ணீரில் அடித்து சென்றுள்ளது. அதனை அவர் பிடிக்க முயற்சி செய்த நிலையில், தண்ணீரில் சிக்கிக் கொண்டார். நீர்வீழ்ச்சியில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருந்த நிலையில் அவரை தண்ணீர் அடித்து சென்றுள்ளது. இதனால் கரையேற முடியாமல் தவித்த மாணவர் மாயமானார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது நண்பர்கள் முகமதுவை காப்பாற்ற முடியாமல் தவித்தனர்.
இதையும் படிங்க : இரண்டு குழந்தைகளுடன் குகைக்குள் வசித்து வந்த ரஷ்ய பெண்.. ரோந்து பணியின்போது மீட்ட போலீசார்!
5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட மாணவர்
இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவரை தேடிவந்தனர். பிறகு 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காணாமல் போன மாணவர் முகமது பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் முகமதுவின் நண்பர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.