Viral Video : கழுத்தில் பாம்பை போட்டுக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Snake Catcher Died By Snake Bite in Madhya Pradesh | மத்திய பிரதேசத்தில் பாம்பு பிடி வீரராக இருந்து வந்த நபர், பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டியுள்ளார். அப்போது அவரை பாம்பு கடிக்கவே அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

போபால், ஜூலை 18 : மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) கழுத்தில் பாம்பை போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர் அதே பாம்பு கடித்த பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு பிடி வீரரான அவர் இதுவரை பல கொடிய விஷம் கொண்ட பாம்புகளை பிடித்துள்ள நிலையில், அச்சமின்றி இந்த செயலை செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக பாம்பு அவரை கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கழுத்தில் பாம்பை போட்டுக்குக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்
மத்தியபிரதேச மாநிலம் குணால் மாவட்த்தை சேர்ந்தவர் தீபக் மஹாவர். 42 வயதாகும் இவர் ஒரு சிறந்த பாம்பு பிடி வீரராக விளங்கி வந்துள்ளார். அவருக்கு பல்வேறு இடங்களில் பாம்புகளைப் பிடித்து அனுபவம் உண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று பர்பத்புரா கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக தீபக் மஹாவருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் பாம்பை பிடிக்க வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை அடுத்து கல்வி நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு பதுங்கி இருந்த விஷ பாம்பை லாவகமாக பிடித்துள்ளார்.




இதையும் படிங்க : லிவ் இன் பார்ட்னரை கொன்ற இளைஞர்.. துடிதுடித்து இறந்துபோன பெண்.. ஆந்திராவில் ஷாக்!
பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த பாம்பு பிடி வீரர்
A Snake charmer from Madhya Pradesh Deepak Mahabar died after a rescued snake he was carrying around his neck bit him.
He was going to drop his daughter to school with snake when it bit him.pic.twitter.com/lqPyyKDhpE
— काश/if Kakvi (@KashifKakvi) July 17, 2025
இந்த நிலையில், பள்ளியில் இருக்கும் மகனை அழைத்து வருமாறு அவருக்கு வீட்டிலிருந்து போன் வந்துள்ளது. இதனை அடுத்து தான் பிடித்து அந்த விஷ பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் கழுத்தில் பாம்பு இருப்பதை அவர் ரீல்ஸ் ஆகவும் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே கழுத்தில் பாம்பை போட்டுக்கொண்டு மகனை வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில், செல்லும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துள்ளது. இதில் அவரது உடலில் விஷம் ஏரிய நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.