Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விவாகரத்து கிடைத்த உற்சாகம்.. 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய நபர்.. வைரல் வீடியோ!

Man Celebrates Divorce with Milk Bath | திருமண விழாவை கொண்டாடுவதை போலவே சமீப காலமாக விவாகரத்தை கொண்டாடும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அசாமை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்த நிலையில், 40 லிட்டர் பாலில் குளித்து மிகவும் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

விவாகரத்து கிடைத்த உற்சாகம்.. 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய நபர்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jul 2025 23:52 PM

அசாம், ஜூலை 15 : அசாமில் (Assam) விவகாரத்து கிடைத்ததை கொண்டாடும் விதமாக ஒருவர் பாலில் குளித்த (Man Took Milk Bath) சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த நபர் பாலியில் குளிக்கும் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது. மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு வழியாக விவாகரத்து பெற்று தனது மனைவியிடம் இருந்து அவர் விடுதலை பெற்ற நிலையில், அதனை கொண்டாடும் விதமாக அவர் இதனை செய்துள்ளார்.

விவாகரத்தை கொண்டாட 40 லிட்டர் பாலில் குளித்த நபர்

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் போரோலியாபாராவில் வசித்து வருபவர் மாணிக் அலி. 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி மகள் மற்றும் மனைவி இருந்தனர். ஆனால், மாணிக்கின் மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் இரண்டு முறை வீட்டை விட்டும் ஓடியுள்ளார். இருப்பினும் மாணிக் அலி தனது மகளுக்காக மனைவியை மன்னித்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே உடன்பாடு இல்லாத சூழலில், அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்து அதற்காக விண்ணப்பித்துள்ளனர். விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் மாணிக் அலியின் வீடியோ

இந்த நிலையில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை கொண்டாடும் விதமாக மாணிக் அலி பாலில் குளித்துள்ளார். இதனை அவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : காணாமல் போன நிலையில், மீண்டும் தாயுடன் இணைந்த குட்டி யானை.. இணையத்தில் வைரலாகும் பாச போராட்ட வீடியோ!

இன்று முதல் நான் விடுதலையாகி விட்டேன் – மாணிக் அலி

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் மாணிக் அலி நான்கு வாலிகளில் 40 லிட்டர் பாலை வைத்து குளிக்கிறார். அதில் பேசும் அவர் “இன்று முதல் நான் விடுதலையாகி விட்டேன்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில், விவாகரத்தை கொண்டாடும் விதமாக மாணிக் அலி பாலில் குளித்து பதிவிட்ட வீடியோ கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.