Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்.. உடலை சாலையில் வீசிய கொடூரம்.. பகீர் பின்னணி!

Wife Killed Husband with the help of Lover | மும்பையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் ஒருவர், தனது கணவர் அது குறித்து கண்டித்ததால் காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்து சாலையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பகீர் சம்பவம் தெரிய வந்துள்ளது.

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்.. உடலை சாலையில் வீசிய கொடூரம்.. பகீர் பின்னணி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jul 2025 08:54 AM

மும்பை, ஜூலை 22 : மும்பையில் (Mumbai) பெண் ஒருவர் காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டம் தீட்டி அந்த நபரை கொலை செய்த அவர்கள் உடலை சாலையில் வீசி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சில மாதங்கள் கழித்து இந்த கொலை சம்பவம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் காதலனின் உதவியுடன் கணவனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆரே காலனியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

மராட்டிய மாநிலம் மும்பை ஆரே காலனி பகுதியில் மார்ச் 15, 2025 அன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி தொடங்கியுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில்,  பிணமாக மீட்கப்பட்டவர் மும்பையை சேர்ந்த சந்திரசேகர் என்பதும், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கணவனை தீர்த்துக்கட்ட காதலனுடன் இணைந்து திட்டம் தீட்டிய பெண்

இந்த நிலையில், இந்த வாழ்க்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சந்திரசேகரின் மனைவி ரஞ்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சந்திரசேகரின் மனைவி ரஞ்சனாவுக்கும், ஷாருக் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ரஞ்சனா, ஷாருக்கை வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த சந்திரசேகர் மாணவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனா, சந்திரசேகரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கு தனது காதலன் ஷாருக்கின் உதவியை அவர் நாடியுள்ளார்.

ரஞ்சனா அளித்த பகீர் வாக்குமூலம்

அதன்படி சம்பவத்தன்று ஷாருக்கானை, ரஞ்சனா வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு தனது கூட்டாளி மைனுதின் என்பவருடன் சென்ற ஷாருக், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இருவரும் சேர்ந்து உடலை ஆரே காலனி பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சந்திரசேகரின் மரணம் குறித்த ரஞ்சனா அளித்த பகீர் வாக்குமூலத்தை அடுத்து ஷாருக்கை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மைனுதின் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.