Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்.. பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு… 50 பேர் காயம்!

Haridwar Mansa Devi Temple Stampede : உத்தரகாண்ட் மாநிலம் மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்கு செல்லும்போது படிக்கட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்.. பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு…  50 பேர் காயம்!
ஹரித்வாரில் கோயிலில் கூட்ட நெரிசல்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Jul 2025 12:33 PM

உத்தரகாண்ட், ஜூலை 27 : உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பக்தர்களுக்கு மூச்சு திணறல், காயங்கள் ஏற்பட்டு மயக்க அடைந்தனர். இதனை அடுத்து, பக்தர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மன்சா தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் 2025 ஜூலை 26ஆம் தேதியான இன்று நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் செய்ய வருகை தந்தனர். அப்போது, பக்தர்கள் கோயிலுக்கு படிக்கட்டில் ஏற முயன்றனர். அப்போது, பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலுக்கு பக்தர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், சிலர் மயக்கமடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, மயக்க நிலையில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தததில் 6 பேர் உயிரிழந்தனர்.  மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read : பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 20 வாகனங்கள்.. ஒருவர் பலி!

கூட்ட நெரிசலில் 6 பேர் பலி


ஹரித்வாரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “மான்சா தேவி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்தனர். காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியைத் தொடங்கியது. காயமடைந்த சுமார் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

மின்சாரம் பற்றிய வதந்திகளில் மக்களிடையே ஏற்பட்ட பீதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது” என கூறினார். இந்த விபத்து குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து செய்தி அறிந்தேன்.

Also Read : கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய பெண்.. திடீரென கார் கடலில் கவிழ்ந்ததால் அதிர்ச்சி!

உள்ளூர் காவல்துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார்.