Google Map : கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய பெண்.. திடீரென கார் கடலில் கவிழ்ந்ததால் அதிர்ச்சி!
Mumbai Google Maps Accident | மும்பையிக் கூகுள் மேப் பார்த்து பெண் ஒருவர் கார் ஓட்டிச் சென்ற நிலையில், கார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவிமும்பை பகுதியில் இருந்து உல்வே நோக்கி சென்ற அந்த பெண் வழி தெரியாததால் கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார்.

மும்பை, ஜூலை 27 : மும்பையில் (Mumbai) கூகுள் மேப் (Google Map) பார்த்து பெண் ஓட்டிச் சென்ற கார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் சம்பவத்தன்று நவிமும்பை பேலாப்பூரில் இருந்து உல்வே நோக்கி நள்ளிரவு 1 மணிக்கு அவர் கூகுள் மேப் பார்த்தபடி காரை ஓட்டிச் சென்ற நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் அந்த பெண் உயிர் பிழைத்துள்ளார். இந்த நிலையில், கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் சென்ற கார் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் மேப் பார்த்து கார் ஒட்டிய பெண் – கடலில் கவிழ்ந்து விபத்து
மும்பை அடுத்த நவிமும்பை பேலாப்பூரில் இருந்து உல்வே பகுதியை நோக்கி நள்ளிரவு ஒரு மணி அளவில் பெண் ஒருவர் கார் ஓட்டி சென்றுள்ளார். அந்தப் பெண்ணுக்கு உல்வே சொல்லும் வழி தெரியாத நிலையில் அவர் கூகுள் மேப் பார்த்து கரை ஓட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் கார் பேலாப்பூர் துருவ்தரா படகு துறைமுக பகுதியில் சென்ற போது, அந்த பெண்ணால் பாதையை சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் காரை பாலத்தின் வழியாக ஓட்டி செல்வதற்கு பதிலாக, அதற்கு கீழ்பகுதியில் அவர் காரை இயக்கியுள்ளார். கூகுள் மேப்பில் நேராக பாதை இருப்பதை போல காட்டிய நிலையில் அதனைப் பார்த்து அந்த பெண் பயணம் செய்துள்ளார்.
இதையும் படிங்க : Google Map பார்த்து சென்றதால் குளத்தில் கவிழ்ந்த கார்.. உயிர் தப்பிய தம்பதி!




விரைந்து வந்து பெண்ணை காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்
அப்போது திடீரென பாதை முடிந்து தண்ணீர் வந்துள்ளது. அப்போது தனக்கு முன்னே கடல் இருப்பதை அந்தப் பெண் சுதாரித்துக் கொள்வதற்கு முன்னதாகவே கார் தலை குப்புற கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயத்தில அலறி உள்ளார். இந்த சம்பவத்தின் போது அந்த பகுதியில் கடல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இதனை பார்த்து அவர்கள் உடனடியாக படகில் விரைந்து சென்று கடலில் தத்தளித்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க : மனைவியுடன் மீண்டும் இணைய மாந்திரீகம் செய்த நபர்.. 6 வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூரம்!
ஆனால் கார் நீரில் மூழ்கியது. பின்னர் அதிகாரிகளின் உதவியுடன் கார் கிரேன் மூலம் பத்திரமாக கடலில் இருந்து மீட்கப்பட்டது. நள்ளிரவில் பெண் காருடன் கடலில் கவிழ்ந்த நிலையில், பாதுகாப்பு படையினர் விரைந்து பணியாற்றியதால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.