Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Google Map பார்த்து சென்றதால் குளத்தில் கவிழ்ந்த கார்.. உயிர் தப்பிய தம்பதி!

Kerala Couple's Google Maps Mishap | கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தம்பதி இருவர் கூகுள் மேப் பார்த்து காரில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், அவர்களது கார் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. காரில் தம்பதி சிக்கி தவித்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர்.

Google Map பார்த்து சென்றதால் குளத்தில் கவிழ்ந்த கார்.. உயிர் தப்பிய தம்பதி!
விபத்துக்குள்ளன கார்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Jul 2025 08:28 AM

திருவனந்தபுரம், ஜூலை 25 : கேரளாவில் (Kerala) தம்பதி இருவர் கூகுள் மேப் பார்த்து காரில் பயணம் செய்த நிலையில், அவர்களின் கார் குளத்தில் சிக்கிய நிலையில் பொதுமக்களின் உதவியால் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாலை முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததால் அவர்கள் கூகுள் மேப்பை (Google Map) பயன்படுத்தியுள்ளனர். அதன்படி, கூகுள் மேப்பின் வழிகாட்டுதலின் படி சென்ற தம்பதியின் கார் திடீரென குளத்தில் விழுந்து விபத்தை சந்தித்துள்ளது. இந்த நிலையில். கூகுள் மேப் பார்த்து சென்ற கார் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கூகுள் மேப் பார்த்து சென்ற தம்பதி – திடீரென குளத்தில் பாய்ந்த கார்

கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் ஜோசி ஜோசப். 62 வயதாகும் இவர், 58 வயதாகும் தனது மனைவி ஷீபாவை அழைத்துக் கொண்டு ஜூன் 23, 2025 அன்று தங்களது காரில் மான்வெட்டம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளனர். காரை ஜோசி ஜோசப் ஓட்டிச் சென்ற நிலையில், அவர் கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்றுள்ளார். இந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், கருப்பந்தரை என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக அங்கிருந்த குளத்திற்குள் பாய்ந்துள்ளது.

வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த தம்பதி – காப்பாற்றிய பொதுமக்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி காரில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்துள்ளனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள், தம்பதியை மீட்பதற்கான பணியில் இறங்கியுள்ளனர். அதன்படி, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கயிறு மூலம் காரை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அது மட்டுமின்றி காரில் இருந்த தம்பதிகளையும் அவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதையும் படிங்க : வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் பூச்சி.. பதறிய பயணி.. ரயில்வே விளக்கம்!

நடந்தது என்ன? – விபத்து குறித்து பேசிய ஜோசி ஜோசப்

இந்த சம்பவம் குறித்து பேசிய ஜோசி ஜோசப் “சாலை எங்கும் வெள்ளம் தேங்கி கிடந்த நிலையில் கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக எங்களது கார் குலத்திற்குள் பாய்ந்தது என்று கூறியுள்ளார். கூகுள் மேப் பார்த்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வப்போது இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் கூகுள் மேப்பை பார்த்து சென்ற தம்பதியின் கார் குளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.