Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் பூச்சி.. பதறிய பயணி.. ரயில்வே விளக்கம்!

Delhi Vande Bharat Train : டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிகள் கிடந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகமும் பதிலளித்துள்ளது. இதுபோன்று நடப்பது முதல்முறையல்ல. பல்வேறு வந்தே பாரத் ரயில்களில் இதுபோன்ற தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் பூச்சி.. பதறிய பயணி.. ரயில்வே விளக்கம்!
வந்தே பாரத் ரயில்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Jul 2025 18:10 PM

டெல்லி, ஜூலை 23 : டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் (Vande Bharat Rail) வழங்கிய உணவில் பூச்சிகள் இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயணிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரயில்வே நிர்வாகமும் பதிலளித்துள்ளது.  நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு ரயில்களையும் மத்திய அரசு இயக்கி வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விரைவாக செல்லக் கூடியது என்பதால், பயணிகள் பெரும்பாலும் வந்தே பாரத் ரயிலில் பயணித்து வருகின்றனர்.  இதற்கிடையில், ரயில்வேயில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது.

உணவுகளில் பூச்சிகள், கெட்டுப்போன உணவுகள் போன்றவை இருந்து வருகிறது. இது தொடர்பாக பயணிகளும் புகார் அளித்து வருகின்றனர்.  இதனை தடுக்க ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான், டெல்லியில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிகள் இருந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  2025 ஜூலை 22ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்டது பருப்பு டாலில் பூச்சிகள் இருந்துள்ளது.

Also Read : பரபரப்பு.. டெல்லி ஏர்போர்ட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?

வந்தே பாரத் ரயில் உணவில் கிடந்த பூச்சி


இதனை அந்த பயணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.  அதாவது, “இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து, பயணிகள் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.  ஜூலை 22, 2025 தேதியிட்ட வந்தே பாரத் ரயிலில் பயணத்தின் போது உணவில் பூச்சி காணப்பட்டது. ரயில் எண் 22440 c3 இருக்கை எண் 53” என குறிப்பிட்டு இருந்தார்.

Also Read : மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கும் ஏர் இந்தியா.. மும்பையில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்ற விமானம்..!

ரயில்வே விளக்கம்


இதற்கு ரயில்வே நிர்வாகமும் பதிலளித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “சிரமத்திற்கு வருந்துகிறோம்! விவரங்கள், PNR மற்றும் மொபைல் எண் ஆகியவற்றைப் பகிரவும். விரைவான தீர்வுக்காக https://railmadad.indianrailways.gov.in என்ற முகவரியிலும் உங்கள் கவலையை நேரடியாகத் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடப்பது முதல்முறை அல்ல.  பல வந்தே பாரத் ரயில்களில் வழங்கிய உணவில் பூச்சிகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.