பறவைகள் விலங்குகள் மோதி 2000 விமான விபத்துகள்.. டெல்லிக்கு முதலிடம்.. கட்டுப்படுத்துவது எப்படி?
Airplane Accidents: ஆண்டுதோறும் பறவைகள் விமானத்தில் மோதி சுமார் 2000 விபத்துகள் ஏறப்டுவதாக தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லி முதல் இடம் பிடித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 442 விபத்துகளும், 2023 ஆம் ஆண்டில் 616 விபத்துகளும், 2024 ஆம் ஆண்டில் 419 விபத்துகளும் நடந்ததாக தரவுகளின் படி தெரிய வந்துள்ளது.

டெல்லி, ஜூலை 16, 2025: நாட்டின் மிகவும் பரபரப்பான 20 விமான நிலையங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 2000 பறவைகள் மற்றும் விலங்குகள் விமானங்களில் மோதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதல் ஐந்து மாதங்களில் இதுவரை 641 நிகழ்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின் படி இந்த விமான நிலையங்களில் 2022 ஆம் ஆண்டில் 1633 பறவை அல்லது விலங்குகள் விமானத்தில் மோதி விபத்து நடந்துள்ளதாகவும், இது 2023 ஆம் ஆண்டில் 2269 ஆக உயர்ந்ததாகவும், 2024 சற்று குறைந்து 2066 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் டெல்லிக்கு முதலிடம்:
கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 400க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் இது போன்ற விபத்துகளில் அதிகபட்ச பாதிப்பை டெல்லி விமான நிலையத்தில் பதிவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு 442 விபத்துகளும், 2023 ஆம் ஆண்டில் 616 விபத்துகளும், 2024 ஆம் ஆண்டில் 419 விபத்துகளும் நடந்ததாக தரவுகளின் படி தெரிய வந்துள்ளது 2025 ஆம் ஆண்டில் தற்போது வரை 95 விபத்துக்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பேராசியர் மீது பாலியல் புகார்.. நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு.. ஒடிசாவில் வெடித்த போராட்டம்!
இந்த பட்டியலில் அகமதாபாத் விமான நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் 80 விபத்துகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்து பதிவானது. அதாவது 2023 ஆம் ஆண்டில் 214 விபத்துகளும், 2024 ஆம் ஆண்டில் 21 விபத்துகளும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்திற்கு பறவைகள் விமானத்தில் மோதியதால் இரண்டு இன்ஜின்களும் பழுதடைந்து விபத்துக்குள்ளானதாக கருத்துக்கள் வெளியானது.
விபத்துகளை குறைக்க என்ன செய்யலாம்?
விமான நிலையங்களில் பறவை விலங்கு அச்சுறுத்தலை திறம்பட சமாளிக்க தேசிய வனவிலங்கு ஆபத்து மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் சமீபத்தில் டெல்லியில் உள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனராகத்தில் அதன் இயக்குனர் ஜெனரல் ஃபைஸ் அகமத் கித்வாய் தலைமையில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க: விவாகரத்து கிடைத்த உற்சாகம்.. 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய நபர்.. வைரல் வீடியோ!
சிவில் விமான போக்குவரத்து இயக்குனராகத்தின் படி அனைத்து விமான நிலையங்களிலும் பறவை இனங்களை அதன் இருப்பிடத்தை காண்பதில் குறைபாடு இருப்பதாகவும், விமான விபத்துகளில் 24 சதவீதம் மட்டுமே பறவைகளால் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், “ பறவை இனங்களிலேயே வவ்வால் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், கருப்பு விளக்கு, புறாக்கள் இருப்பிடம், வவ்வால் கண்டறிதல் சாதனம், ஏவியன் டிஃபென்டர்கள் போன்ற நுட்பங்கள் மற்றும் இதற்கென குழுவை நியமித்தல் ஆகியவை இந்த விபத்துக்களை குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளனர்.