முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல் தவிர்க்க புதிய முயற்சி.. இனி இவ்வளவு டிக்கெட் மட்டும் தான்..
Unreserved Ticket: பயணிகள் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாத ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட் மட்டுமே வழங்க இந்திய ரயில்வே தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகப்படியான பயண சீட்டுகள் வழங்குவதால் தான் இது போன்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதாக கருத்துக்கள் எழுந்த நிலையில் ரயில்வே துறை தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் தட்கல் முறையில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தட்கல் டிக்கெட் முறையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த மாற்றங்கள் 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவுக்கு ஆதார் ஆதன்டிவிகேசன் தேவை என தெரிவிக்கப்பட்டது. அதாவது தட்கள் பயண சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயணர்களால் மட்டுமே செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவில்லா பெட்டிகளில் வரும் மாற்றம்:
தினசரி லட்சக்கணக்கான பயனர்கள் இந்திய ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ செல்வதற்கு ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.முன்பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு வகுப்புகள் உள்ளது. அதாவது ஸ்லீப்பர், 3ஏசி, 2ஏசி, ஃபர்ஸ்ட் கிளாஸ் குபே உள்ளது. ஆனால் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அல்லது வெயிட்டிங்லெஸ் ஸ்டில் இருக்கக்கூடியவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளை பயணிக்க நேரிடுகிறது.
மேலும் படிக்க: நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற சட்டை.. பிடிக்க சென்ற மாணவர் பரிதாப பலி!
இந்த முன்பதிவு இல்லாத பெட்டிகளில் குறிப்பிடத்தக்க மக்கள் மட்டுமல்லாமல் ஏராளமான மக்கள் ஒரே சமயத்தில் பயணம் மேற்கொண்டு கொள்கின்றனர். அதாவது ஒரு பெட்டியில் 100 பேர் வரை பயணம் செய்ய ஏதுவாக இருந்தால் அந்த ஒரு பெட்டியில் சுமார் 300 முதல் 350 பேர் மிகவும் நெருக்கமாக பயணம் மேற்கொண்டு கொள்கின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சோதனை முறையில் முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை:
ஒரு சில சமயங்களில் கூட்ட நெரிசலில் மூச்சு திணறும் அபாயமும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது இந்திய ரயில்வே புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது முன்பதிவு இல்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. பயணிகள் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாத ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட் மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மரண தண்டனை ரத்தாகுமா? போராடும் நிமிஷா பிரியா குடும்பத்தினர்… பின்னணி என்ன?
அதிகப்படியான பயண சீட்டுகள் வழங்குவதால் தான் இது போன்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதாக கருத்துக்கள் எழுந்த நிலையில் ரயில்வே துறை தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இது சோதனை அடிப்படையில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் வெற்றியடைந்தால் பிற மாவட்டங்களுக்கும் இது அமல்படுத்த ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.