சரக்கு ரயில் சேவை கட்டணம் உயர்த்த இந்திய ரயில்வே முடிவு.. எப்போது முதல்?
Freight Train Service Charges: சரக்கு ரயில் இன்ஜின்களுக்கான கட்டணம் 11 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு பின் தற்போது உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை, ஜூலை 18, 2025: தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய குடோன்களில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்குவதற்காக நிறுத்தவும், அதேபோல் ரயிலின் பாதைகளை மாற்றுவதற்காகவும், ஒரு மணி நேர அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து தனியாரிடமிருந்து இந்திய ரயில்வே வசூலித்து வருகிறது. இந்த கட்டணத்தை தற்போது உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 16 ஆண்டுகள் கழித்து இந்த கட்டணமானது உயர்த்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயணிகள் ரயிலில் டிக்கெட் விலை இந்திய ரயில்வே தரப்பில் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சரக்கு ரயில்களுக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கக்கூடிய கட்டணங்கள் உயர்த்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை தரப்பில் பல்வேறு சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
சரக்கு ரயில் கட்டணம் உயர்த்த திட்டம்:
மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஏதுவாக இந்த ரயில் சேவை முக்கிய பங்கு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சரக்குகளை ஏற்றி செல்வதில் இந்திய ரயில்வே துறையின் பங்கு அதீதமாக உள்ளது நிதர்சனம். அந்த வகையில் சரக்கு ரயில்கள் மூலம் உணவுப் பொருட்கள், டீசல், பெட்ரோல், எண்ணெய், நிலக்கரி போன்ற அத்தியாவசிய தேவைகள் இந்தியா முழுவதும் ஏற்றி இறக்கப்படுகிறது.
மேலும் படிக்க: பயணிகளே..! பெங்களூரு, ஈரோடு செல்லும் ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு
இதற்காக ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என இந்திய ரயில்வே தரப்பில் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அந்த ரயில்வே வாரியத்திடம் இருந்து மண்டல ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வெதர் அப்டேட்
11 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டம்:,
அதன்படி இன்ஜின்களுக்கான கட்டணம் 11 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில் ஒதுக்குதல் மற்றும் பாதை மாற்றுதல் கட்டணம் கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு பின் தற்போது உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வில் என்ஜின்களில் பராமரிப்பு செலவுகள், எரிபொருள் பராமரிப்பு, உதிரி பாகங்கள் செலவு அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது