Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரை கொன்று உடலை டைல்ஸ் அடியில் புதைத்த மனைவி – மும்பை அருகே அதிர்ச்சி!

Maharashtra Horror: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில், திரைப்படம் 'த்ரிஷ்யம்' போன்று ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. கோமல் என்ற பெண், தனது கள்ளக்காதலன் மோனுவுடன் சேர்ந்து கணவர் விஜயைக் கொலை செய்து, வீட்டில் டைல்ஸ்களுக்கு அடியில் புதைத்தார். 15 நாட்கள் காணாமல் போன விஜயின் உடலை சகோதரர்கள் கண்டுபிடித்தனர்.

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரை கொன்று உடலை டைல்ஸ் அடியில் புதைத்த மனைவி – மும்பை அருகே அதிர்ச்சி!
மனைவி கோமல்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Jul 2025 14:02 PM

மகாராஷ்டிரா ஜூலை 22: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் (Palghar district of Maharashtra), ‘த்ரிஷ்யம்’ (Trishyam) திரைப்படத்தை நினைவுபடுத்தும் கொடூரம் நிகழ்ந்துள்ளது. கோமல் என்ற பெண், தனது கள்ளக்காதலன் மோனுவுடன் இணைந்து கணவர் விஜயை கொலை செய்துள்ளார். கொலைக்குப்பின், விஜயின் உடலை வீட்டில் டைல்ஸ்களுக்கு அடியில் புதைத்துள்ளனர். 15 நாட்கள் காணாமல் போன விஜயை தேடிய சகோதரர்கள், வீட்டில் மாற்றத்தை கண்டனரா. போலீசார் விசாரணையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது; கோமலும் மோனுவும் தலைமறைவாக உள்ளனர். கள்ளக்காதல் மற்றும் சந்தேகத்தில் ஏற்பட்ட கோபமே கொலையின் காரணமாகக் கூறப்படுகிறது.

கணவரை கொன்று உடலை டைல்ஸ் அடியில் புதைத்த மனைவி

மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகிலுள்ள பால்கர் மாவட்டத்தில், ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தைப் போலவே ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கு ஒரு பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து, அவரது உடலை வீட்டிற்குள்ளேயே டைல்ஸ் அடியில் புதைத்துள்ளார். இந்தச் சம்பவம், திரில்லிங்கான திரைப்படக் கதையை நிஜத்தில் அரங்கேற்றியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது எப்படி? – கணவர் 15 நாள் மாயம்

நாலசோபரா கிழக்கில் உள்ள கட்காபாடா பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது விஜய் சவான். இவர் கடந்த 15 நாட்களாகக் காணவில்லை. தனது 28 வயது மனைவி கோமல் சவனுடன் அவர் வசித்து வந்தார். விஜய் காணாமல் போனதையடுத்து, அவரது சகோதரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சந்தேகம் வலுத்தது: திங்கட்கிழமை காலை (ஜூலை 21, 2025), விஜயின் சகோதரர்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் தரையில் சில டைல்ஸ்கள் மற்றவற்றுடன் பொருந்தாமல் வெவ்வேறு நிறத்தில் இருப்பதைக் கவனித்தனர். இதனால் சந்தேகம் வலுக்கவே, அவர்கள் அந்த டைல்ஸ்களை அகற்றிப் பார்த்தனர்.

பயங்கரமான கண்டுபிடிப்பு: டைல்ஸ்களுக்கு அடியில் துர்நாற்றத்துடன் ஒரு பனியன் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சோதனை செய்தபோது, டைல்ஸ்களுக்கு அடியில் விஜயின் உடல் புதைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

Also Read: காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்.. உடலை சாலையில் வீசிய கொடூரம்.. 

கள்ளக்காதல் விவகாரம் மற்றும் காவல்துறை விசாரணை

விஜய் சவானை அவரது மனைவி கோமல், பக்கத்து வீட்டுக்காரரான மோனுவுடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கோமலும், மோனுவும் கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை. இருவரும் காதல் உறவில் இருந்ததாகவும், தற்போது இந்த வழக்கில் முக்கியச் சந்தேக நபர்களாகவும் உள்ளனர்.

கொலையின் பின்னணி: கிடைத்த தகவல்களின்படி, விஜய் சவான் தனது மனைவி கோமலின் நடத்தையில் சந்தேகம் கொண்டு பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனாலும் கோமல் தனது கள்ளக்காதலை மோனுவுடன் தொடர்ந்துள்ளார். கணவர் இல்லாத நேரங்களில் இருவரும் ஒன்றாகச் சுற்றித் திரிந்துள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் விஜய்க்குத் தகவல் தெரிவித்தனர்.

கொடூரமான கொலை: விஜய் வீட்டில் இருந்தபோது, மோனு பின்னால் இருந்து அவரைத் தாக்கியுள்ளார். இதில் விஜய் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, உடல் முழுவதும் ரத்தம் கொப்பளித்தது. கோமலும் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

பின்னர், இருவரும் கூர்மையான ஆயுதங்களால் விஜயின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்து, அதன் மேல் டைல்ஸ் போட்டு மூடியுள்ளனர்.