Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள்.. கொடூரமாக குத்தி கொலை செய்த மாமனார்.. பகீர் சம்பவம்!

Father in Law Kills Daughter in Law | நாமக்கலில் ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை மாமனார் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவன் உயிரிழந்துவிட்ட நிலையில், அருள்ஜோதி என்ற பெண் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். அதனை பயன்படுத்தி அத்துமீறிய முடியாத ஆத்திரத்தில் இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது.

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள்.. கொடூரமாக குத்தி கொலை செய்த மாமனார்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Jul 2025 08:57 AM

நாமக்கல், ஜூலை 15 : நாமக்கலில் ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை மாமனார் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில்,  குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் அந்த பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை, மாமனார் கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் – கொடூரமாக கொலை செய்த மாமனார்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இவரது கணவர் உயிரிழந்துள்ளார். இதனால் அருள்ஜோதி, தனது குழந்தைகளுடன் தனது கணவரின் தந்தையும், மாமனாருமான சேட்டு என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். மகன் உயிரிழந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த மருமகளிடம் மாமனார்  சேட்டு தவறாக நடந்துக்கொள்ள பலமுறை முயற்சி செய்துள்ளார். அதுமட்டுமன்றி,  தனது ஆசைக்கு இணங்குமாறு அவர் அருள்ஜோதியை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், அருள்ஜோதி அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

மருமகளை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மாமனார்

தான் பலமுறை கேட்டும் அருள்ஜோதி ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மாமனார், அருள்ஜோதியை வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த அருள்ஜோதியை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருள்ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பிறந்தநாளில் கொடூரம்.. இளைஞரை கொலை செய்த நண்பர்கள்.. வட சென்னையில் பயங்கரம்!

பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

உலகம்  முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வீடுகள் மற்றும் உறவினர்கள் மூலம் அதிகமான பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடுமையான விதிகள் மற்றும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில், ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை மாமனார் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.