அஜித்குமாரின் தம்பிக்கு மதுரை ஆவினில் வேலை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Ajith Kumar Custodial Death Case : இந்தியாவையே உலுக்கிய இளைஞர் அஜித் குமார் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு வழங்கிய வேலையை மதுரை ஆவினுக்கு மாற்றித்தரும் முடிவு பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவையே உலுக்கிய இளைஞர் அஜித் குமார் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரின் மரணத்துக்கு ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர் பெரியகருப்பன், மூன்று செனட் நிலமும், அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு வேலைக்கான ஆணையும் வழங்கினார். அஜித்குமார் தாய் மாலதிக்கு, ஜூலை, 2ல் ஆறுதல் தெரிவிக்க வந்த அமைச்சர் பெரியகருப்பன், ஏனாதியில் மூன்று சென்ட் நிலமும், சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு பணி ஆணையும் வழங்கினார்.
நவீன் குமாருக்கு மதுரை ஆவினில் வேலையை மாற்றித்தர அரசு பரிசீலனை
இந்த நிலையில் தனக்கு கிடைத்த வேலை மற்றும் வீட்டு மனை பட்டா குறித்து அஜித்குமார் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நவீன் குமாருக்கு மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலையை மாற்றித் தர பரீசிலனை செய்து வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவையும் வேறு இடத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிக்க: சிவகங்கை அஜித் குமார் மரணம்.. விசாரணையை துவங்கிய சிபிஐ.. அடுத்து என்ன?
மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய 27 வயது அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். மறுநாள் அவர் காவலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அடுத்து, போலீசாரின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் புகாரளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து வழக்கில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தீவிரமடையும் சிபிஐ விசாரணை
அவ்வழக்கின் விசாரணை தற்போது சிபிஐயிடம் மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் தமிழக காவல்துறையிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையைத் துரிதமாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, டிஎஸ்பி மோகித் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 15, 2025 அன்று முதல் மதுரை வந்து விசாரணையை தீவிரமாக ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க : அஜித்குமார் காவல் மரணம்: நிகிதா புகார் பொய்யா? சிபிஐ விசாரணையில் புதிய குழப்பம்
அஜித் குமாரின் உடலில் 44 காயங்களுடன் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையும், சமூக ஊடகங்களில் வெளியான தாக்குதல் வீடியோவும், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாக்அப் மரணம் என்பது சட்டத்தின் மீதான நேரடி தாக்குதலாக பார்க்கப்படுகிறது. எனவே, உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள், இந்த சிபிஐ விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.