Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லாக் அப் மரணங்கள்.. பனையூருக்கு வந்த 21 குடும்பத்தினர்.. விஜய் சந்திப்பு!

TVK Chief Vijay : தமிழகத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் லாக் அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் அழைத்து பேசியுள்ளார்.

லாக் அப் மரணங்கள்.. பனையூருக்கு வந்த 21 குடும்பத்தினர்..  விஜய் சந்திப்பு!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Jul 2025 21:32 PM

சென்னை, ஜூலை 12 : தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த லாக் அப் (Lockup Death) மரணங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  (Tamilaga Vettri Kazhagam Chief Vijay) சந்தித்துள்ளார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 21 குடும்பத்தினருடன் விஜய் சந்தித்து பேசியுள்ளார். 2025 ஜூலை 13ஆம் தேதியான நாளை லாக்அப் மரணத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் விஜய் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், பனையூரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் பேசி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அண்மையில் தான், ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கை முடித்த அவர், தற்போது முழு அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

2026ஆம் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளதால், அதற்காக பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், மக்கள் பிரச்னை பற்றி தீவிரமாக குரல் கொடுத்து வருகிறது. மேலும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும், மத்தியில் அளும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் கூட நடந்த செயற்குழு கூட்டத்தில் கடுமையாக விமர்சித்தார். மேலும், கட்சி தொடக்கத்தில் இருந்தே பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

Also Read : நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. மதுரையில் த.வெ.க வின் இரண்டாவது மாநில மாநாடு?

லாக் அப் மரணங்கள்

மேலும், பரந்தூர் மக்களையும் அவர் சந்தித்து இருக்கிறார். தற்போது அவர் கையில் எடுத்திருக்கும் விஷயம் லாக் அப் மரணங்கள். சமீபத்தில், சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். இந்த விவகாரத்தை கையில் எடுத்த விஜய், கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

அதோடு, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையும் அறிவித்தார். மேலும், அஜித் குமார் மரணத்தை கண்டித்து போராட்டத்தை நடத்தவும் உள்ளார். அதன்படி, 2025 ஜூலை 13ஆம் தேதியான நாளை தமிழக வெற்றிக் கழக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்த விஜய்

இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளால் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த 21 குடும்பங்களை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி..!

அதில், விசாரணைக்கு அழைத்து சென்று உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்நத் கோகுல் ஸ்ரீ குடும்பத்தினர், அயனாவரத்தைச் சேர்ந்த  விக்னேஷ் குடும்பத்தினர், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் உள்ளிட்ட குடும்பத்தினரை விஜய் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூலை 13ஆம் தேதியான நாளை போராட்டத்தை நடத்த உள்ள நிலையில், 2025 ஜூலை 12ஆம் தேதியான இன்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.