Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகங்கை இளைஞர் மரணம்.. போராட்டத்தை தள்ளி வையுங்கள்.. தவெகவிற்கு ஐகோர்ட் உத்தரவு!

Madras High Court On TVK Protest : சிவகங்கை இளைஞ்ர் மரணம் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி போராட்டத்தை தள்ளிவைக்க அறிவுறுத்தி உள்ளார்.

சிவகங்கை இளைஞர் மரணம்.. போராட்டத்தை தள்ளி வையுங்கள்.. தவெகவிற்கு ஐகோர்ட் உத்தரவு!
தவெக போராட்டம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Jul 2025 11:47 AM

சென்னை, ஜூலை 04 : சிவகங்கை மடப்புரம் கோயில் காவலர் கொலை விவகாரம் (Sivaganga Custodial Death) தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் (TVK Protest) மனு தாக்கல் செய்யப்பட்டது. போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுவில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்  அருகே மடப்புரம் கோயில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர்  27 வயதான அஜித் குமார். இவரை திருட்டு புகார் ஒன்றில் திருப்புவனம் தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு, அஜித் குமார் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சிவகங்கை இளைஞர் மரணம்

அஜித் குமார் உயிரிழந்தது  மாநிலத்தையே உலுக்கியது.   போலீசார் தாக்கியதால் அஜித் குமார் உயிரிழந்ததாக உறவினர்கள், குடும்பத்தினர் குற்றச்சாட்டினர். இந்த வழக்கு தொடர்பாக,    சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பகா 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், அஜித் குமாரை தாக்கி வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அஜித் குமார் போலீசார் தாக்கி சித்ரவதை செய்ததில் உயிரிழந்தது உறுதியானது. அதோடு,  அஜித் குமாரின் பிரேத பரிசோதனையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அஜித் குமாரின் உடலில் 50க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது மூளைகளிலும் ரத்தக் கசிவு, சிகரெட்டாலும் சூடு வைத்து சித்ரவதை செய்தது  பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அஜித் குமார் மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி  பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தவெகவிற்கு ஐகோர்ட் உத்தரவு

இதில், தமிழக வெற்றிக் கழகம் 2025 ஜூலை 6ஆம் தேதி போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் இரண்டு முறை காவல்துறையை அணுகியது. ஆனால் இரண்டு முறையும் அது மறுக்கப்பட்டது. இந்த நிலையில்,  ஆர்ப்பாட்டம் நடத்த அனுமுதி அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை 2025 ஜூலை 4ஆம் தேதியான இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி த.வெ.க தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, 2025 ஜூலை 4ஆம் தேதியான இன்று பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, தமிழகத்தில் இந்த ஆட்சியில் இதுவரை 23 விசாரணை மரணங்கள் நடந்துள்ளதாகவும், அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு பதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். குற்றம் செய்யாதீர்கள். மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

இன்னும் ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளன. முதலில் அதை திருத்தக் கூறுங்கள் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். பின்னர், மனு எண்ணிடப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தினார்.