Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் எப்போது? வெளியான அறிவிப்பு..!

TVK Party State Executive Meeting: தமிழக வெற்றிக்கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஜூலை 4, 2025 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள், மக்கள் தொடர்பு நிகழ்வுகள், பூத் கமிட்டி மாநாடுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். மாநில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் எப்போது?  வெளியான அறிவிப்பு..!
மாநிலச் செயற்குழுக் கூட்டம்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Jun 2025 10:24 AM IST

சென்னை ஜூன் 27: தமிழக வெற்றிக்கழகத்தின் (Tamilaga Vetri Kazhagam (TVK)) மாநிலச் செயற்குழுக் கூட்டம் (state executive committee meeting ) 2025 ஜூலை 4-ம் தேதி சென்னை பனையூரில் (Panayur, Chennai) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மக்களுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். மக்கள் சந்திப்பு திட்டம் நவம்பர் மாதத்திற்கு பிறகு நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் பூத் கமிட்டி மாநாடுகள் மற்றும் ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளன. மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அமைக்கும் முக்கிய கூட்டமாக இது கருதப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் எதிரொலி

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) தனது தேர்தல் ஆயத்த பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கட்சியின் முக்கியமான மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகிற 2025 ஜூலை 4-ம் தேதி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 4-ல் மாநிலச் செயற்குழுக் கூட்டம்

2025 ஜூலை 4-ம் தேதி நடக்கும் இந்த கூட்டம், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், அடுத்த கட்ட நடவடிக்கைகள், தேர்தல் சின்னம் பெற்ற பிறகு மக்களிடம் நேரில் சென்று பிரச்சாரம் செய்யும் திட்டங்கள், மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள், பூத் கமிட்டி மாநாடுகள், மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாநிலச் செயற்குழுக் கூட்டம்

நிர்வாகிகள் மட்டும் பங்கேற்க வேண்டும்

மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நவம்பர் மாதத்திற்கு பிறகு நடைபெறும்

இதேவேளை, மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நவம்பர் மாதத்திற்கு பிறகு நடைபெறும் எனவும், தேர்தல் சின்னம் கிடைத்த பிறகு விஜய் நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கோவையில் நடைபெறிய பூத் கமிட்டி மாநாட்டிற்குப் பிறகு, வேலூர் மற்றும் தர்மபுரியிலும் இதுபோன்ற மாநாடுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தேர்தல் சூழ்நிலை உருவாகி வரும் நிலையில், கட்சி வியூகங்களை தீவிரமாக திட்டமிடும் செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முந்திய கூட்டங்கள்

தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியதிலிருந்து பல்வேறு முக்கிய கூட்டங்களை நடத்தி வருகிறது. 2024 பிப்ரவரியில் நடைபெற்ற துவக்கக் கூட்டத்தில் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் அறிவிக்கப்பட்டன. 2024 ஏப்ரல், மே மாதங்களில் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் நியமனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2025 மே மாதத்தில் கோவையில் பூத் கமிட்டி மாநாடு விஜய் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் வியூகங்கள், மக்களிடம் சின்னத்தை கொண்டு செல்லும் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் கூட்டங்களில் இடம்பெரும். இந்தத் தொடரில் 2025 ஜூலை 4ஆம் தேதி மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.