Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி.. கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

CM MK Stalin: 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்காக தஞ்சையில் இருக்கும் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.

5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி.. கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Jun 2025 20:41 PM

தஞ்சாவூர், ஜூன் 15,2025: தஞ்சை மாவட்டம் கல்லணையில் (Kallanai Dam) டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 2 நாள் பயணமாக தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி வரை விமான மூலம் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக தஞ்சை சென்றடைந்தார். தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையிலிருந்து குருவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். அதன் பிறகு அங்கிருந்து தஞ்சை சென்ற முதலமைச்சர், தஞ்சை மணிமண்டபம் அருகில் இருந்து மேரிஸ் கார்னர், ரயில் நிலையம் வழியாக ரோடு ஷோ மூலம் நடந்து சென்று சாலையில் இருபுறமும் இருக்கும் மக்களை சந்தித்து, மனுக்களை பெற்று செல்கிறார்.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது ஜூன் 15 2025 தேதியான இன்று தஞ்சை கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் ஜூன் 15 2025 மாலை தஞ்சை வந்த முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக கல்லணையிலிருந்து குருவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பளவு சாகுபடிக்காக இந்த தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை தொடர்ந்து ரோடு ஷோவில் கலந்துக்கொள்கிறார். பின்னர் பழைய பேருந்து நிலையத்தை அடைந்த பிறகு அங்கு முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரவு தஞ்சையில் ஓய்வெடுக்கும் முதல்வர் நாளை ஜூன் 16,2025 காலை தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு:

மேலும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் , அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று சிற்புரையாற்றுகிறார்.. அதனை தொடர்ந்து திருச்சி செல்லலும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இரண்டு நாள் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வண்டிருக்கும் நிலையில் தஞ்சை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், இரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு கருதி ட்ரோன் பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது .