Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாளோடு மேடைக்கு வந்த தொண்டர்.. கடுப்பான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்..

Makkal Needhi Maiam: மாநிலங்களவை தலைவராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வாளை கொண்டு வந்த தொண்டர், கமல்ஹாசனை வாளை வாங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாளோடு மேடைக்கு வந்த தொண்டர்.. கடுப்பான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்..
நிகழ்ச்சியில் கடுப்பான கமல் ஹாசன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Jun 2025 10:17 AM

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக (Rajya Sabha MP)மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கமல்ஹாசன் தேர்தெடுக்கப்பட்ட பின் நேற்று அதாவது ஜூன் 14 2025 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார் அப்பொழுது அங்கு வந்திருந்த தொண்டர் ஒருவர் கமல்ஹாசனிடம் வாளை கொடுக்க முயன்றார். ஆனால் அதனை வாங்க மறுத்து அந்த வாளை கீழே வைக்கும் படி கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் ஒரு சில நிமிடங்கள் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தற்போது மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் அப்துல்லா, சண்முகம், பி. வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அன்புமணி ராமதாஸ், சந்திரசேகரன் ஆகியோரின் பதிவை காலம் முடிவடையும் நிலையில் இவர்களுக்கு மாற்றாக அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், திமுக சார்பில் கவிஞர் சல்மா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சிவலிங்கம், பி. வில்சன் உள்ளிட்டூர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்த்து பெற்ற கமல் ஹாசன்:


மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஜூன் 14 2025 ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்க பேரவை, நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய அவர் நமக்கு நிறைய வேலை இருக்கிறது பேச்சை விட்டு விட்டு வேலையை கவனிக்க வேண்டும் இது தொண்டர்கள் அறிவுரையாக எடுத்துக் கொள்ளாமல் ஆணையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

வாளை வாங்க மறுத்ததால் சலசலப்பு:


மேலும் அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்று கமல்ஹாசனுக்கு பூங்கொத்து, புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.  இந்த நிகழ்ச்சியின் போது தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்த வாளை மேடையில் ஏறி கமல்ஹாசனிடம் கொடுக்க முயன்றார். அப்போது கமல்ஹாசன் கடிந்து கொண்டு அந்த வாளை கீழே வைக்குமாறு தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த தொண்டருடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகைப்படம் எடுத்து வாழ்த்து பெற்றுக் கொண்டார்