த.வெ.க கொடியில் யானை சின்னம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. புதிய மனு மீது பதிலளிக்க உத்தரவு..
Tamilaga Vettri Kazhagam Flag Case: ஜூலை 3, 2025 தேதியான இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானை பயன்படுத்துவது தொடர்பாக இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யபட்ட புதிய மனு மீது பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 2025, ஜூலை 3: தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இரண்டு யானைகள் இருக்கும் வகையில் நடுவில் ஒரு வாகை மலர் இடம்பெற்றுள்ளது. இதில் இந்த கொடியில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தங்களது கட்சியை பிரதிபலிக்கும் வகையில் யானை இடம்பெற்றுள்ளதாக கருத்துக்கள் எழுந்து வந்தது. பின்னர் இது தொடர்பாக தமிழக வெற்றி கழக கட்சி கொடியில் யானை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.
த.வெ.க கட்சிக்கொடியில் யானை பயன்படுத்தக்கூடாது:
இந்த மனு மீது இன்று அதாவது ஜூலை 3 2025 ஆம் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் நேற்று அதாவது ஜூன் 2 2025 தேதியான நேற்று இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் ஜூலை 1 2025 ஆம் தேதி நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக வெற்றி கழகம் சார்பாக வழக்கறிஞர் விஜய் நாராயணன் நேரில் ஆஜராகி விவாதித்தார். அப்போது த.வெ.க கட்சியின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு தான் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் கட்சி கொடிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதங்களை முன்வைத்தார்.
அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கக்கூடியது ஒற்றை யானை எனவும் இதில் இருக்கக்கூடிய இரண்டு யானைகள் எனவும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இந்த கொடி அமைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதங்களை முன் வைத்தார்.
த.வெ.க பதில் அளிக்க உத்தரவு:
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் முழுமையான வாதங்கள் முன்வைக்கப்படாத நிலையில் கூடுதல் வாதங்களை முன் வைக்கவும் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் கால அவகாசம் வேண்டும் எனக் கூறி நேற்று ஜூலை 2.2025 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 2025 ஜூலை 3 தேதியான இன்று இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஜூலை 2 2006 25 அன்று விசாரணைக்கு வந்த மனுவை, விசாரணைக்கு வந்தது அப்போது பகுஜன் சமாஜ் கட்சி மேற்கொண்டு வாதங்களை முன் வைப்பது குறித்து தமிழக வெற்றி கழகம் இன்று (ஜூலை 3, 2025) பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது