Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. த.வெ.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..

TVK CM Candidate Vijay: தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம், கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4, 2025) பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. த.வெ.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
விஜய்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 04 Jul 2025 14:43 PM

தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம்: தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம், கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4, 2025) பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சார்பு அணி ஒருங்கிணைப்பாளர் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில மாநாடு நடைபெறும் என்றும், 2025 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் த.வெ.க:

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களை இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கிய போது 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என தெளிவாக கூறப்பட்டது. கட்சி தொடங்கியது முதலில் மக்கள் பிரச்சனைகளுக்காக தலைவர் விஜய் குரல் கொடுத்து வந்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், பரந்தூர் விமான நிலையம், சிவகங்கை லாக்கப் மரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தலைவர் விஜய் மக்களை நேரில் சந்தித்தார்.

த.வெ.க செயற்குழு கூட்டம்:


இந்த சூழலில் ஜூலை 4 2025 ஆம் தேதியான இன்று பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் சார்பு அணி ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த செயற்குழுக் கூட்டத்தில் வீட்டிற்கு ஒருவரை தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க வேண்டும் எனவும் ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் வேட்பாளராக த.வெ.க தலைவர் விஜய்:

இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கியமாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாற்றுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை மாதம் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.