சென்னையில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு.. தறிகெட்டு ஓடி விபத்து.. ஒருவர் பலி!
Chennai MTC Bus Accident : சென்னையில் மாநக பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நடந்த சென்ற முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மாரடைப்பு ஏற்பட்டு, ஓட்டுநரும் உயிரிழந்திருக்கிறார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஜூலை 13 : சென்னை அரும்பாக்கத்தில் மாநகர பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து மோதி, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் எப்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக பிக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே இருக்கும். இதற்கிடையில், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் கூட, சென்னை பெரம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலியானார். இந்த நிலையில், தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது. அதாவது, பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு
அதாவது, கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்தில் சல்லும் 70சி பேருந்து 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று காலை வடபழனியில் இருந்து கோயம்பேட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் வேலுமணி (55) என்ற இயக்கி இருக்கிறார். அப்போத, 100 அடி சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருக்கும்போது, ஓட்டுநர் வேலுமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து வேலுமணி பேருந்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
Also Read : பிரபல ரவுடி கொலை.. காரில் வைத்து கும்பல் செய்த கொடூரம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!




இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி இருக்கிறது. மேலும், சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கார்கள் மீது பேருந்து மோதி இருக்கிறது. இந்த விபத்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சென்னையில் அதிர்ச்சி
அங்கு பரிசோதனை மருத்துவர்கள், ஓட்டுநர் வேலுமணி ஏற்கனவே, உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும், பேருந்து மோதியதில் அந்த நபரும் உயிரிழந்துள்ளார். விபத்தில் சாலையில் நடந்து வந்த சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (55) என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஓட்டுநர் வேலுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சேதம் அடைந்த நான்கு கார்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!
சமீப காலங்களில் மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர். சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. மதுபானம், புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம் போன்ற காரணங்களால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.