Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரபல ரவுடி கொலை.. காரில் வைத்து கும்பல் செய்த கொடூரம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

Dindigul History Sheeter Murder : திண்டுக்கல் மாவட்டத்தில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டாளிகளுடன் ஏற்பட்ட தகராறில், ஐந்து பேர் கொண்ட அவரை, காரில் வைத்து சரமாரியாக குத்தி, தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

பிரபல ரவுடி கொலை.. காரில் வைத்து கும்பல் செய்த கொடூரம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Jul 2025 16:28 PM

திண்டுக்கல், ஜூலை 12 : திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபல ரவடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவமணி (30). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது கூட்டாளிகளுடன் காரில் 2025 ஜூலை 11ஆம் தேதியான நேற்று கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறார். காரில் சென்றுக் கொண்டிருக்கும்போது, சிவமணிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்துள்ளது. இதில் ஆத்திரத்தில் கூட்டாளிகள் காருக்குள் வைத்து சிவமணியின் கழுத்தை அறுத்துள்ளனர். மேலும், அந்த கும்பல் சிவமணியை காரில் இருந்து சாலையொரத்தில் தூக்கி விசி, அருகில் கிடந்த கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி கொலை

இதில், சம்பவ இடத்திலேயே சிவமணி உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிவமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செஉறனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி செந்தில்குமார் ஆய்வு நடத்தினர்.

Also Read : பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

அதோடு, சிவமணியை கொலை செய்த ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் சூர்யா, மணிகண்டன், அருண், முனியாண்டி, கார் டிரைவர் சரத் ஆகியோர் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூன்று வருடங்களுக்கு முன்பு, சிவமணி கேங் லீடராக இருந்துள்ளார்.

5 பேர் கைது

அப்போது, அவர் கூட்டாளிகளை டார்ச்சர் செய்ததாகவும், சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து சிவமணியை கூட்டாளிகள் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வத்தலகுண்டில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : திருமலா பால் மேலாளர் கொலையா? விசாரணை வளையில் துணை ஆணையர்.. பின்னணி என்ன?

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, மூதாட்டிகள் கொலை செய்யப்படுவது தற்போது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடும் சட்டங்களையும் கொண்டு வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.