Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரஷர் இயந்திரத்தில் சிக்கிய சேலை.. பல துண்டுகளாக வெட்டப்பட்டு உயிரிழந்த மூதாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!

65 Years Old Woman Died | தூத்துக்குடியில் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டு இருந்த மூதாட்டியின் சேலை அங்கிருந்த கிரஷர் இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், மூதாட்டி இயந்திரத்தில் சிக்கிய நிலையில், அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரஷர் இயந்திரத்தில் சிக்கிய சேலை.. பல துண்டுகளாக வெட்டப்பட்டு உயிரிழந்த மூதாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jul 2025 07:54 AM

தூத்துக்குடி, ஜூலை 13 : தூத்துக்குடியில் (Tuticorin) தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் சேலை அருகில் இருந்த கிரஷர் இயந்திரத்தில் (Crusher Machine) சிக்கிய நிலையில் அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டியின் கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த அவர் தோட்ட வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இந்த கொடூர விபத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கோர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டு இருந்த மூதாட்டிக்கு நடந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ரகுராமபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி இருளாய். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் தனியாக வசித்து வந்த நிலையில் கருப்பசாமி கடந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், 65 வயதாகும் இருளாயி, தான் வசிக்கும் அதே பகுதியில் உள்ள பால்ராஜ் மகன் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, வழக்க்கம் போல தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூதாட்டி இருளாயின் சேலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரஷர் இயந்திரத்தில் சிக்கி உள்ளது. சேலை கிரஷர் இயந்திரத்தில் சிக்கியதும் மெல்ல மெல்ல மூதாட்டியை இழுக்க தொடங்கிய நிலையில் அவர் இயந்திரத்தில் விழுந்து பல துண்டுகளாக வெட்டப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இதையும் படிங்க : கொலையில் முடிந்த பிராங்க் கால்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!

உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார்

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதை தொடர்ந்து உடனடியாக இயந்திரத்தை நிறுத்திய தோட்ட பணியாளர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல துண்டுகளாக வெட்டப்பட்ட இருளாயின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்

கணவனை இழந்து வயிற்று பிழைப்புக்காக தோட்டத்தில் வேலை செய்து வந்த மூதாட்டி கிரஷர் இயந்திரத்தில் சிக்கி கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.