Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

படுக்கை அறையில் ரகசிய கேமரா.. பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர தொந்தரவு செய்த கணவர்.. அரசு பெண் அதிகாரி பகீர் புகார்!

Government Officer Domestic Violence Case | புனேவில் பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும்படி பெண் அதிகாரியை கொடுமை செய்து வந்த அவரது கணவர், ரகசிய கேமரா மூலம் பெண்ணை படம் பிடித்து தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.

படுக்கை அறையில் ரகசிய கேமரா.. பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர தொந்தரவு செய்த கணவர்.. அரசு பெண் அதிகாரி பகீர் புகார்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jul 2025 07:53 AM

மும்பை, ஜுலைஅ 24 : புனேவில் (Pune) 31 வயது அரசு அதிகாரியை அவரது கணவர் படுக்கை அறை மற்றும் கழிவறை, குளியலறைகளில்  ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் அதிகாரியை அவரது கணவர் தனது தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும்படி தொந்தரவு செய்து வந்த நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் தனது கணவர் இத்தகைய கொடூர செயலை செய்ததாக அந்த பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் கேட்டு பெண் அதிகாரியை கொடுமைப்படுத்தி வந்த கணவர்

புனேவை சேர்ந்தவர் 31 வயதான அரசு பெண் அதிகாரி. இவருக்கு திருமணம் ஆன நிலையில்,  இவரது கணவரும் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,  தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர் என்று பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் கார் மாத தவணை கட்ட பெற்றோரிடமிருந்து ரூபாய் 1.50 லட்சம் பணம் வாங்கி வருமாறு தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதனை செய்ய மறுத்த நிலையில் தன்னை அவர் கடுமையாக தாக்கியதாகவும் அதிகாரி தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க : ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரை கொன்று உடலை டைல்ஸ் அடியில் புதைத்த மனைவி – மும்பை அருகே அதிர்ச்சி!

பெண் அதிகாரியின் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்

அதுமட்டுமன்றி படுக்கையறை, குளியல் அறையில், கழிவறை உள்ளிட்ட இடங்களில் ரகசிய கேமராக்களை வைத்து தான் தனிமையாக இருப்பதை படம் பிடித்து, அவர் சொல்லும்படி செய்யவில்லை என்றால் அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என விரட்டியதாகவும் பெண் அதிகாரி தனது புகாரில் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். இந்தன் நிலையில், தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து பெண் அதிகாரியின் கணவர், மாமியார், மைத்துனிகள் அவர்களது கணவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் சமீப காலமாகவே வரதட்சணை கொடுமை சம்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அரசு அதிகாரி ஒருவர் வரதட்சணை கேட்டு மணைவிடை வீடியோ எடுத்து மிரட்டி சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.