ஆங்காங்கே கிடந்த உடல் பாகங்கள்.. பெண்ணின் உடலை 10 துண்டாக வெட்டிய கொடூரம்.. கர்நாடகாவில் பகீர்!
Karnataka Crime News : கர்நாடகாவில் பெண் 10 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, பெண்ணின் உடல் பாகங்கள் 10 இடங்களில் பிளாஸ்டிக் கவரில் கிடந்துள்ளது. காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்கு பிறகு, அந்த பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கர்நாடகா, ஆகஸ்ட் 09 : கர்நாடகாவில் உடல் பாகங்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 இடங்களில் பிளாஸ்டிக் கவரின் பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. உடல் பாகங்களை மீட்ட போலீசார், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது. அதாவது, கர்நாடகாவில் பெண்ணை 10 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலம் சிம்புகனஹள்ளியில் உள்ள முத்யாலம்மா கோயில் அருகே காலையில் தெரு நாய் ஒன்று பிளாஸ்டிக் கவரை வாயில் கவியப்படி எடுத்து சென்றது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதில் கை இருப்பதை கண்டனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பல உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது, லிங்கபுரா சாலை பாலம் அருகே குடல் பாகங்கள், பெண்டோன் நர்சரி அருகே வயிறு மற்றும் பிற உள் உறுப்புகள், ஜோனிகரஹள்ளி அருகே ஒரு கால் மற்றும் இரத்தக் கறை படிந்த பையை போலீசார் கண்டெடுத்தனர்.




Also Read : மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!
பெண்ணின் உடலை 10 துண்டாக வெட்டிய கொடூரம்
மேலும், சில இடங்கள் மற்ற உடல் பாகங்களை போலீசார் கண்டெடுத்தனர். சித்தாரபெட்டாவிற்கும் நெகலாலலுக்கும் இடையிலான சாலையில் இரண்டு பைகளுக்குள் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. கோரடகெரே மற்றும் கோலாலா காவல் நிலையங்களின் எல்லைக்குள் சுமார் 10 இடங்களில் உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் துமகுரு தாலுகாவின் பெல்லாவியைச் சேர்ந்த லட்சுமிதேவம்மா (42) என அடையாளம் காணப்பட்டது. இவர் காணாமல் போனதாக 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி அவரது கணவர் பசவராஜு பெல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
Also Read : டெல்லியை புரட்டி எடுக்கும் கனமழை… சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு!
புகாரின்படி, லட்சுமிதேவம்மா ஆகஸ்ட் 3 ஆம் தேதி தனது மகளைப் பார்க்க ஊர்திகெரேவுக்குச் சென்றிருந்தார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு, அவர் 10 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவ்ந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்தது யார்? பின்னணி என்ன என்ற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர். கொலையாளியை தீவிரம் தேடி வருகின்றனர்.