டெல்லியை புரட்டி எடுக்கும் கனமழை… சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு!
Delhi Heavy Rains : தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று காலை 9.30 மணியளவில் ஜெய்த்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

டெல்லி, ஆகஸ்ட் 09: டெல்லியில் கனமழை (Delhi Heavy Rains) தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஜெய்த்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து (Wall Collapse) விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய டெல்லியில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் மட்டும் நடந்துள்ளது. அதாவது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழுந்து எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியின் ஹரி நகரில் உள்ள பாபா மோகன்ராம் மந்திர் அருகே சுவர் இடிந்து விழுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
Also Read : இந்திய எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்?.. ராணுவம் விளக்கம்!
சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு
Delhi: AAP MLA Ram Singh Netaji visits the site in Hari Nagar area, Jaitpur, where eight people, including two young children, lost their lives after a portion of a wall collapsed during heavy rainfall pic.twitter.com/nuHDJchKVX
— IANS (@ians_india) August 9, 2025
காலை 9.30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது, அங்கு இருந்த பலர் காயமடைந்துள்ளனர். இதனை அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டனர். படுகாயம் அடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Also Read : இந்திய இராணுவ முகாமை மூழ்கடித்த வெள்ளம்.. காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்!
உயிரிழந்தவர்கள் ஷபிபுல் (30), ரபிபுல் (30), முத்து அலி (45), ரூபினா (25), டோலி (25), ருக்சானா (6), ஹசீனா (7) என அடையாளம் காணப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.