Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Uttarakhand Floods: இந்திய இராணுவ முகாமை மூழ்கடித்த வெள்ளம்.. காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்!

Uttarkashi Cloudburst: உத்தரகாசியின் தாராலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பயங்கர வெள்ளம். 5 பேர் உயிரிழப்பு, ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தகவல். கனமழை தொடர்வதால் மீட்புப் பணிகள் பாதிப்பு. ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

Uttarakhand Floods: இந்திய இராணுவ முகாமை மூழ்கடித்த வெள்ளம்.. காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்!
உத்தரகண்ட் வெள்ளம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Aug 2025 22:10 PM

உத்தரகண்ட், ஆகஸ்ட் 5: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷியின் தாராலியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மிகப்பெரிய அளவில் வெள்ளம் (Uttarakhand Floods) ஏற்பட்டு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பேரழிவில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹர்ஷிலில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் ராணுவ முகாமும் (Army Camp) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய ராணுவத்தின் 8-10 வீரர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. தாராலியில் உள்பட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீட்பு பணி தீவிரம்:

தாராலியில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தகவல் கிடைத்தவுடன், இப்ரெக்ஸ் படைப்பிரிவின் வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ராணுவம் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. பேரிடரால் ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது. பேரிடர் நேரத்தில் மக்களுடன் ராணுவம் தோளோடு தோள் நின்று உதவி செய்கிறது. மாவட்ட நிர்வாகம் உதவி எண்களை (01374-222126, 222722, 9456556431) வெளியிட்டுள்ளது.

24 மணி நேரமாக தொடர்ந்து மழை:


உத்தரகண்டில் கடந்த 24 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்டில் பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பரபரப்பாக மாறியுள்ளது. கங்கை நதியைத் தவிர, அனைத்து மழை ஆறுகளிலும் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உத்தரகண்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், மலைப்பகுதிகளில் பயணிக்கும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

டேராடூன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நாளை அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி சமோலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு, அரசு சாரா மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு 2026 ஆகஸ்ட் 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்டின் உத்தரகாண்டின் உத்தரகாசி, பவுரி கர்வால், தெஹ்ரி மற்றும் சாமோலி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.