Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Uttarakhand Floods: டேராடூன் முதல் ஹரித்வார் வரை புரட்டி எடுத்த மழை.. கிராமத்தை உருக்குலைத்த வெள்ளம்..!

Landslides Devastate Uttarakhand: உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கீர்கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கிராமத்தின் பெரும்பகுதியை அழித்துள்ளது. பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

Uttarakhand Floods: டேராடூன் முதல் ஹரித்வார் வரை புரட்டி எடுத்த மழை.. கிராமத்தை உருக்குலைத்த வெள்ளம்..!
உத்தரகண்ட் வெள்ளம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Aug 2025 16:30 PM

உத்தரகண்ட், ஆகஸ்ட் 5: உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாராலி கிராமத்தின் (Dharali village) கீர்கங்காவில் ஏற்பட்ட அதிபயங்கரமான வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், பலரும் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், உத்தரகண்டில் பெய்த கனமழை (Heavy Rain) காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை மோசமாக பாதித்துள்ளது. இந்த தொடர் மழையால் டேராடூனில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது..?

உத்தரகண்டில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஹர்ஷில் பகுதியின் தாராலி கிராமத்தில் உள்ள கீர்கங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமத்தின் பாதி பகுதி அழிந்தது. வெள்ளம் ஏற்பட்டபோது, கிராம மக்கள் முழுவதும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். இதனால், மக்கள் என்ன ஆனார்கள் என்ற நிலையும் பதட்டத்தையும் உண்டாகியுள்ளது.

ALSO READ: சிறுமியுடன் எடுத்த செல்ஃபியை ஸ்டேட்டசில் வைத்த இளைஞர்.. கொலைவெறி தாக்குதல் நடத்திய சிறுமியின் அண்ணன்!

தாராலி கிராமத்தில் ஏற்பட்ட பலத்த சேதத்தை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம், ராணுவம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வெள்ளத்தில் கிராமத்தின் பாதி பகுதி அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது புதைந்திருக்கலாம். புகழ்பெற்ற தாராலி கல்பகேதர் கோயிலும் தண்ணீரில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அழிந்த வீடுகள்:


உத்தரகாஷ் பட்கோட் தாலுகா பகுதியின் பனால் பட்டியில் பெய்த கனமழையில் சிக்கிய சுமார் 12க்கு மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வருகின்ற 2025 ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாநிலம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். அதிலும், மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், மழை காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று 2025 ஆகஸ்ட் 5ம் தேதி டேராடூன், பவுரி, டெஹ்ரி மற்றும் ஹரித்வாரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

ALSO READ: விமானத்தில் ஓடிய கரப்பான் பூச்சிகள்.. பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால், சயனசட்டி அருகே உள்ள யமுனோத்ரி நெடுஞ்சாலையில் சுமார் 25 மீட்டர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சயனசட்டியின் ஒரு பக்கத்தில் உள்ள மலையிலிருந்து பாறைகள் விழுந்து வருகின்றன. இதற்கிடையில், கங்கோத்ரி நெருஞ்சாலை காலை முதல் மதியம் வரை பல இடங்களில் தடைபட்டுள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் 5ம் தேதி இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சயனசட்டியின் ஓஜ்ரி டபர்கோட் அருகே இடிபாடுகள் மற்றும் பாறைகள் விழுந்ததால் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.