Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Air India : விமானத்தில் ஓடிய கரப்பான் பூச்சிகள்.. பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

Cockroach on Air India Flight | ஏர் இந்தியா விமான சேவை குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்துக்கொண்டு இருந்த விமானத்தில் கரப்பான் பூச்சி இருப்பதாக பயணிகள் கூறிய நிலையில், விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Air India : விமானத்தில் ஓடிய கரப்பான் பூச்சிகள்.. பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
மாதிரி புகைப்படன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2025 08:05 AM

மும்பை, ஆகஸ்ட் 05 : அமெரிக்காவில் (America) இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் (Air India Flight) கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அது குறித்து விமான நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இந்த நிலையில், பயணிகளுக்கு வேறு இருக்கைகளை மாற்றி கொடுத்துவிட்டு, விமானத்தை தூய்மை படுத்திய ஏர் இந்தியா கரப்பான் பூச்சி இருந்ததற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த நிலையில், கரப்பான் பூச்சி விவகாரத்தில் ஏர் இந்தியா பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி – பயணிகள் புகார்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றும் (ஆகஸ்ட் 04, 2025) விமானம் பழக்கம் போல இயக்கப்பட்டு இருக்கிறது. அப்போது விமானத்தில் சில கரப்பான் பூச்சிகள் ஓடிய நிலையில், அதனை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அது குறித்து அவர்கள் அசவுகரியமாகவும் நினைத்துள்ளனர். இந்த நிலையில் விமானத்தில் கரப்பான் பூச்சி தென்பட்டது குறித்து பயணிகள் விமான நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : லக்கேஜ் ஏன் அதிகமா இருக்கு? விமான ஊழியர்களை அட்டாக் செய்த ராணுவ அதிகாரி.. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

எரிபொருள் நிரப்புவதற்கு தரை இறங்கிய போது சுத்தம் செய்யப்பட்டது

இந்த நிலையில் கரப்பான் பூச்சி தென்பட்ட இடத்தில் அமர்ந்திருந்த இரண்டு பயணிகளையும் விமான பணியாளர்கள் வேறு இருக்கையில் மாற்றி அமர வைத்துள்ளனர். அப்போது விமானம் கொல்கத்தாவில் தரை இறங்கியதும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி விமானம் கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக தரை இறங்கிய போது விமானம் முழுவதுமாக தூய்மை செய்யப்பட்டது.

இதையும் படிங்க  : பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வீட்டிலேயே இருங்கள்.. குஜராத் போலீஸ் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

பயணிகளிடம் மன்னிப்புக்கு கேட்ட ஏர் இந்தியா

பின்னர் அங்கிருந்து விமானம் மும்பைக்கு புறப்பட்ட சென்றது. கரப்பான் பூச்சி இருந்தது சுத்தம் செய்யப்பட்ட நிலையில், பயணிகளுக்கு ஏற்பட்ட ஆசவுகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும் ஏர் இந்தியா உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.