Hyderabad Child Marriage: ஹைதராபாத் அதிர்ச்சி! 40 வயது ஆண் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த கொடூரம்.. 5 பேர் கைது!
Child Marriage Scandal in Telangana: ஹைதராபாத் அருகே 40 வயது ஆண், 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர், ஆண், அவரது மனைவி, பூசாரி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். குழந்தை திருமணத்தை தடுக்க சட்டங்கள் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் கவலை அதிகரித்துள்ளது.

ஹைதராபாத், ஜூலை 31: குழந்தை திருமணம் (Child Marriage) மிகவும் மோசமான செயல் என்று மத்திய அரசாங்கம் முதல் மாநில அரசாங்கம் வரை கூறி வருகின்றன. மேலும், குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு சட்டங்களும் (Illegal Marriage) கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சமீபத்தில் 40 வயதுடைய ஒருவர் 8ம் வகுப்பு படிக்கும் பெண்ணை திருமணம் செய்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுமை வேறு எங்கும் நடக்கவில்லை. நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவை அடுத்த ஹைதராபாத்தில் (Hyderabad) இருந்து சிறிது தொலைவில் நடைபெற இருந்தது. அந்த ஆணும் அவரது மனைவியும் இந்த சட்டவிரோத செயலை செய்ய முயற்சித்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது..?
ஹைதராபாத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள நந்திகாமாவில் திருமணம் செய்த ஆண், அவரது மனைவி, திருமணத்தை நடத்த இருந்த பூசாரி மற்றும் பிறரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்ட தகவலின்படி, 8ம் வகுப்பு மாணவி ஒருவர் மாலையுடன் 40 வயது ஆணின் முன் நிற்கும் புகைப்படம் காண கிடைத்தது.
ALSO READ: வாக்கிங் சென்ற இளம்பெண்.. பாய்ந்து வந்து கடித்த ஹஸ்கி நாய்.. அதிர்ச்சி வீடியோ!
அவர்களுக்கு அருகில் அந்த ஆணின் மனைவியும் இருந்துள்ளார். இவர்களுடன் ஒரு பூசாரியும் உள்ளார். இது திருமணம் புகைப்படம் என கண்டறிந்தோம். அதன்பிறகு, அவர்களுக்கு நடைபெற்ற திருமணம் தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 40 வயது நபர் ஒருவர் 13 வயது பெண்ணை திருமணம் செய்தார். இருப்பினும், பள்ளி ஆசிரியருக்கு இந்த விஷயம் தெரிந்ததும், அவர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
நாங்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையின்கீழ், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த திருமணத்திற்கு 13 வயது மாணவி எப்படி ஒப்புக்கொண்டார்..? பெற்றோரின் பங்கு என்ன..? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
நந்திகாமா இன்ஸ்பெக்டர் பி. பிரசாத்தின் கூற்றுப்படி, ”8ம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த 2025 மே 30ம் தேதி செவெல்லாவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுட் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் அவரது மனைவி ஏற்பாட்டுடன் செய்யப்பட்டு, உள்ளூர் பூசாரி ஒருவரால் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சிறுமியின் வயதை பொருட்படுத்தாமல் நடந்தது.
ஒரு ரகசிய தகவலை தொடர்ந்து, போலீஸ் குழுக்கள் அவரது வீட்டிற்கு வந்து அந்த சிறுமியை மீட்டனர். கவுட், சிறுமியின் தாய் ஸ்வர்ணா, திருமண தரகர்கள் பெண்டையா மற்றும் அவரது மனைவி யாதம்பா, திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆஞ்சநேயுலு உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் தொடரும்போது மேலும் பல பெயர்கள் வெளிவரக்கூடும்” என்று தெரிவித்தார்.