வாக்கிங் சென்ற இளம்பெண்.. பாய்ந்து வந்து கடித்த ஹஸ்கி நாய்.. அதிர்ச்சி வீடியோ!
Husky Dog Attacks Woman In Gurugram : நாடு முழுவதும் நாய்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்த இளம்பெண்ணை, ஹஸ்கி நாய் கடித்து குதறி உள்ளது. இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹரியானா, ஜூலை 30 : ஹரியானா மாநிலத்தில் (Haryana Dog Attack) பெண்ணை ஹஸ்கி நாய் (Husky Dog Attack On Woman) கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். நாய் கடியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு, ரேபிஸ் நோயால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், வீடுகளில் வளர்க்கும் நாய்களின் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஏனென்றால், வீடுகளில் வளர்க்கும் நாய்களை சாலைகளுக்கு அழைத்து செல்லும்போது, அது பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, அவர்களை கடித்தும் வருகிறது. இதனால், நாய் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இந்த சூழலில் தான், ஹரியானாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்த பெண்ணை, ஹஸ்கி என்ற நாய் கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவம் 2025 ஜூலை 27ஆம் தேதி மாலை நடந்தள்ளது.




Also Read : இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென பாய்ந்த சிறுத்தை.. நொடி பொழுதில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!
பெண்ணை பாய்ந்து வந்து கடித்த ஹஸ்கி நாய்
Scary shit!
🚨Woman mauled by a pet Husky in luxury apartment complex on Gurugram’s Golf Course Road
Dog latches onto her hand, refusing to let go…bystanders finally helped
A national task force on dog safety is probably the need of the hour pic.twitter.com/5gs3uEDU3R
— Nabila Jamal (@nabilajamal_) July 30, 2025
பெண் ஒருவர் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அதே வழியில் மற்றொரு பெண் ஒருவர் ஹஸ்கி நாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். ஹஸ்கி நாயை கையில் கயிற்றுடன் பிடித்தப்படி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு எதிரில் வந்துக் கொண்டிருந்த பெண்ணை ஹஸ்கி நாய் கடித்து குதறியது.
Also Read : நீர்வீழ்ச்சியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்.. சுத்தம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி!
நாய் பாய்ந்து வந்து கடித்ததுடம், அந்த பெண் கீழே விழுந்துள்ளார். இதன்பிறகும், அவரை நாய் கடித்து குதறியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்த பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடித்ததில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.