Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : நீர்வீழ்ச்சியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்.. சுத்தம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி!

Kangra Waterfall Viral Video | இந்தியாவில் உள்ள ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் அசுத்தமாக மாறி வருகின்றன. இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீர்வீழ்ச்சியில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : நீர்வீழ்ச்சியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்.. சுத்தம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jul 2025 00:38 AM

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில சிரிக்க வைக்கவும், சில சிந்திக்க வைக்கவும் செய்யும். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பலரையும் சிந்திக்க வைக்கும்படி அமைந்துள்ளது. அதாவது, நீர்வீழ்ச்சியில் இருக்கும் குப்பைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ தான் அது. இந்த வீடியோ மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நீர்வீழ்ச்சியை சுத்தம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி – சிந்திக்க வைத்த வீடியோ

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கங்க்ரா மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு சுற்றுலா வரும் பொதுமக்கள் சிலர் அந்த நீர்வீழ்ச்சியில் குப்பைகளை விட்டு செல்வது உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அங்கிருந்த குப்பைகளை தனது கைகளால் சுத்தம் செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கையில் பாம்புகளை பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்ற ஆண்கள்.. பீகாரில் வினோத சம்பவம்!

இணையத்தில் வைரலாகும் சுற்றுலா பயணியின் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஏராளமான பொதுமக்கள் நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அந்த நீர்வீழ்ச்சியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. அதனை பார்க்கும் பொதுமக்கள் கண்டும் காணாமல் செல்கின்றனர். ஆனால், அந்த குப்பைகளை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணி அவற்றை வெறும் கைகளால் சுத்தம் செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆறுகளையும், நதிகளையும் வெறும் நீர்நிலைகளாக கருதும் மக்கள் அவற்றை பாதுகாக்கின்றனர். ஆனால், நீர்நிலைகளை தெய்வமாக வணங்கும் நமது நாட்டில் இத்தகைய நிலமை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.