ரூ.4 கோடி மதிப்பிலான ஃபெராரி காரை சாண்டிலியிராக பயன்படுத்தும் யூடியூபர்? வைரலாகும் வீடியோ!
When money meets creativity: துபாயில் உள்ள பிரபல யூடியூபர் மோவிலாக்ஸ் (Movlogs), தன்னுடைய லிவிங் ரூமில் சாண்டிலியராக ரூ.4.3 கோடி செலவில் ஃபெராரி காரை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது பதிவில் பலரும் தங்களது ஆச்சரியத்தை பதிவு செய்து வருகின்றனர்.

துபாயில் வசிக்கும் பிரபல யூடியூபர் மோவ்லாக்ஸ் (MoVlogs) தனது வீட்டில் லிவிங் ரூமில் ஃபெராரி காரை ஷாண்டிலியராக தொங்கவைத்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். “என் புதிய $500,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹4.3 கோடி) சாண்டிலியர்” என்ற தலைப்பில் வெளியிட்ட அவரது வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விலையுயர்ந்த ஃபெராரி உண்மையான கார் அல்ல. ஆனால் அது உண்மையான ‘LaFerrari’ காரை போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு ஜெட் கார். இதை நீரில் ஜெட் ஸ்கீ போல பயன்படுத்தலாம் என்றும், இது தனக்காக தனிப்பட்ட முறையில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார் என்று தனது வீடியோவில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
வீட்டுக்குள் சாண்டிலியராக பயன்படுத்தப்படும் ஃபெராரி?!
இந்த வீடியோவில் பத்து பேர் அந்த காரை தூக்கி மோவ்லாக்ஸின் வீட்டுக்குள் கொண்டுவரும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகள் வழியாக கார் மிகுந்த கவனத்துடன் கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு, ஒரு சிறப்பான லிஃப்ட் மூலம், அந்தக் கார் நேராக லிவிங் ரூமின் மேலே தொங்க விடப்படுகிறது. இது பார்ப்பவர்களை வியக்க வைக்கும் விதத்தில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வீடியோவில் மோவ்லாக்ஸ் அப்படியே தனது லிவிங் ரூம் வழியாக நடந்து செல்கிறார், அவர் தலையின் மேலே அந்த கார்ஷாண்டிலியர் பிரகாசமாக தொங்கிக்கொண்டிருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.




விலையுயர்ந்த காரை சாண்டிலியிராக பயன்படுத்தும் யூடியூபரின் வீடியோ
View this post on Instagram
இதையும் படிக்க: கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்.. ஷாக் சம்பவம்!
சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்கள்
இந்த வீடியோ சமூக வலைதளங்களின் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிக விலையுயர்ந்த ஃபெராரி காரை லிவிங் ரூமில் சாண்டிலியராக வைத்து விட்டாரே!” என்று ஒருவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்., “இந்தக் கார் தரையில் விழுந்து விடாமலிருக்க கடவுள் தான் காப்பாற்ற வேண்டு் என்றும் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். ஆனால், இதற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் கிடைத்துள்ளன. ஒருவர் “இதற்கு பதிலாக ஒரு உண்மையான, ஃபெராரி காரை பயன்படுத்தியிருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும். இது பிளாஸ்டிக் பொம்மை மாதிரி தான் தெரியுது,” என்று ஒருவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகாலமாக இருந்த மருத்துவ மர்மம்.. சேட் ஜி.பி.டியால் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்..
மோவ்லாக்ஸ் போன்ற யூடியூப் இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை காட்சிப்படுத்தும் விதத்தில் வித்தியாசமான வழிகளை நாடுவது இது முதன்முறை அல்ல. ஆனால், ஒரு ஃபெராரி காரை வீட்டு உள்பகுதியில் சாண்டிலியராக மாற்றும் இந்த முயற்சி, நிச்சயமாக உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது போன்று, சாத்தியமற்ற விஷயங்களை செய்து கவனம் ஈர்ப்பதில் தான் இன்றைய சமூக வலைதளங்கள் இயங்கி வருகிறது.