Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

10 ஆண்டுகாலமாக இருந்த மருத்துவ மர்மம்.. சேட் ஜி.பி.டியால் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்..

ChatGPT: 10 ஆண்டுகளாக ஒரு நபருக்கு இருந்த நோய் அறிகுறியை மருத்துவர்கள் கண்டுபிடிக்க தவறிய போதும், மருத்துவ பரிசோதனை முடிவுகளை சேட் ஜிபிடியில் அப்லோட் செய்து அந்த நபருக்கு அரியவகை ஹோமோசைகஸ் A1298C MTHFR பிறழ்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகாலமாக இருந்த மருத்துவ மர்மம்.. சேட் ஜி.பி.டியால் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Jul 2025 11:28 AM

ஓபன் ஏ.ஐ ஆல் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட் பாட், சேட் ஜிபிடி பத்து ஆண்டுகளாக மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத ஒரு நோயை மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை வைத்து கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பான ரெடிட் பதிவு ஒரு பயனர் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரல் ஆகி வருகிறது. பல மருத்துவர்கள் நிபுணர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் கூட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பரிசோதித்து வருவதாகவும் தற்போது அதனை சேட் ஜிபிடி கண்டுபிடித்துள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அட்வென்சரஸ் கோல்ட் 6935 என்ற பயனர் இதனை பகிர்ந்துள்ளார். அதில் சேட் ஜிபிடி 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு பிரச்சினையை கண்டுபிடித்துள்ளது என்ற தலைப்பில் இதனை பதிவிட்டுள்ளார்.

சேட் ஜிபிடியின் புதிய முயற்சி:

மேலும் அந்த பதிவில் 10 ஆண்டுகளாக எனக்கு பல விவரிக்க முடியாத அறிகுறிகள் இருந்ததாகவும் முதுகெலும்பில் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனை என அனைத்தையும் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அரிதான நோய் இருப்பது கண்டுபிடிப்பு:

இந்த மர்மமான அறிகுறிக்களுக்காக பல மருத்துவர்களிடம் அவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தாலும் எந்த பயனும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் சாட் ஜிபிடி-யில் அப்லோட் செய்த பொழுது அவருக்கு ஹோமோசைகஸ் A1298C MTHFR பிறழ்வு இருப்பது தெரியவந்துள்ளது. இது மக்கள் தொகையில் 7 முதல் 12 சதம் வரை இருக்கக்கூடிய மக்களை பாதிப்பதாக கூறப்படுகிறது.

சேட் ஜிபிடி வெளியிட்ட முடிவுகளை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த போது சேட் ஜிபிடி வெளியிட்டதை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். சேட் ஜிபிடி- இன் இந்த கண்டுபிடிப்பை கண்ட மருத்துவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இவை அனைத்தும் அவருக்கு பொருந்தமாக இருப்பதாக தெரிவித்தனர். ஹோமோசைகஸ் A1298C MTHFR பிறழ்வு தொடர்பாக மருத்துவர்கள் ஒருபோதும் சோதனை மேற்கொள்ள யோசிக்கவில்லை என்றும் தற்போது சேட் ஜிபிடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆலோசனை மிக முக்கியம் என அறிவுரை:

இதனை தொடர்ந்து இதற்கான சிகிச்சைகள் அந்த நபருக்கு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பதிவில் சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் கடைசியில் இதுபோன்ற சேட் ஜிபிடி கண்டுபிடிப்புகள் மருத்துவரின் ஆலோசனை கண்டிப்பாக பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.