இனி துபாய் ஈஸியா போலாம்.. வந்தது கோல்டன் விசா.. இவ்வளவு தானா? எப்படி பெறுவது?
UAE Golden Visa : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியர்களுக்காக பிரத்யேமாக கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கோல்டன் விசாவை குறைந்த செலவில் பெற்றுக் கொண்டு, தங்கள் குடும்பத்துடன் செட்டில் ஆக முடியும். எனவே, இந்த விசாவை யார் யார் பெறலாம்? தகுதிகள் என்ன போன்ற விவரங்கள் இங்கு பார்ப்போம்.

துபாய், ஜூலை 07 : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) இந்தியர்களுக்கு புதிய கோல்டன் விசாவை (UAE Golden Visa) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த கோல்டன் விசாவை பெறுவதற்கு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறப்படுகிறது. எனவே, இந்த விசா இந்தியர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பலரும் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, துபாய் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விசா இந்தியர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கோல்டன் விசாவை தற்போது குறைந்த செலவிலேயே பெற்றுக் கொள்ள முடியும். முன்னதாக, 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியது.
துபாயின் கோல்டன் விசா
அப்போது, இந்த விசாவை பெறுவதற்கு ரூ.4.6 கோடி மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்து விசாவை பெற்றனர். 2022ஆம் ஆண்டு கோல்டன் விசாவில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், முதலீடு தொகை என்பது மாறாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது கோல்டன் விசாவில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, சுமார் ரூ. 23 லட்சம் செலுத்தினா கோல்டன் விசாவை ஈஸியாக பெற முடியும். இதில் எந்த வகையான முதலீடும் தேவையில்லை. இந்த விசா நிரந்தரமானது. இந்த விசாவை ஒருமுறை பெற்றுக் கொண்டு இந்தியர்க்ள் வாழ்நாள் முழுவதும் செட்டில் ஆக முடியும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்தியா மற்றும் வங்கதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.




கோல்டன் விசாவால் யார் பயனடைவார்கள்?
இந்த விசாவை பெற சொத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னதாக கோல்டன் விசாவை பெற கோடிக்கணக்கான முதலீடு செய்ய வேண்டி இருந்தது. தற்போது அது இல்லை. ரூ.24 லட்சம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் துபாயில் இருக்கலாம். இதனால், வணிகர்கள் மட்டுமின்றி, சாதாரண இந்திய குடிமக்களும் இந்த கோல்டன் விசாவை பெறலாம்.
புதியதாக திருத்தப்பட்ட கோல்டன் விசா மூலம் செவிலியர்கள், ஆசிரியர்கள், முதல்வர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், யூடியூபர்கள், பாட்காஸ்டர்கள், டிஜிட்டல் content creators, கடல்சார் துறை அதிகாரிகள், சொகுசு படகு உரிமையாளர்கள், podcasters ஆகியோர்கள் இந்த விசா பெற தகுதியானவர்கள்.
கோல்டன் விசாவைப் பெற்றவுடன், ஒருவர் தன் குடும்பத்துன் துபாயில் இருக்கலாம். அதோடு, வேலைக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தலாம். இந்த விசா இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிரந்தர குடியிருப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான புதிய அம்சமாகும். இந்த விசாவை மூன்று மாதங்களில் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.